ஆசாரிப்பள்ளம்

இது தமிழகத்தில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓர் பேரூராட்சி ஆகும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆசாரிப்பள்ளம் (ஆங்கிலம்:Acharipallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்

தற்போது ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியானது நாகர்கோயில் மாநகராட்சிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

Remove ads

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆசாரிபள்ளம் பேரூராட்சியின் மக்கள் தொகை 16,822 ஆக உள்ளது. அதில் இந்துக்கள் 60.28% ஆகவும், இசுலாமியர் 0.90% ஆகவும், கிறித்தவர்கள் 38.71%, சீக்கியர்கள் 0.02% ஆகவும், பௌத்தர்கள் 0.02% ஆகவும், சமணர்கள் 0.01% ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 0.07% ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1037 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 95.08% ஆகவுள்ளது. [3]

Remove ads

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி

பழைய திருவாங்கூர் சமஸ்தான காசநோய் மருத்துவமனை வளாகத்தில் இன்று கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 100 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது அமைந்துள்ளது. பசுமை பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரில் மாணவர்களும் மருத்துவர்களும் சேர்ந்து மரங்கள் நட்டு வருகின்றனர்.

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads