நாகர்கோவில் மாநகராட்சி
தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில் ஒன்றாகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகர்கோவில் மாநகராட்சி தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான நாகர்கோவிலில் அமைந்துள்ளது. இம்மாநகராட்சி கன்னியாகுமரியியின் வடக்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி 52 உறுப்பினர்களைக் கொண்ட மன்றமாக செயல்படுகிறது. இது தமிழக மாநகராட்சிகளில் ஒன்றாகும். [1] தற்போது கோட்டாறு, ஆசாரிப்பள்ளம், இளங்கடை போன்ற பகுதிகள் நாகர்கோவில் மாநகராட்சிப்பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் ஆகும்.இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 81 கோடி ரூபாய் ஆகும்.
Remove ads
வரலாறு
1920-இல் நாகர்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த போது நாகர்கோவில் நகராட்சி நிறுவப்பட்டது. 1947-இல் நாகர்கோவில் நகராட்சியை மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம், குமரி விடுதலைப் போராட்டத்தின் விளைவாக, 1 நவம்பர் 1956 அன்று தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மாவட்டமாக மாறிய போது, 1956-இல் நாகர்கோவில் நகராட்சியை இரண்டாம்நிலை நகராட்சியாகவும், பின்னர் 1961-இல் முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 12 அக்டோபர் 1978-இல் தேர்வுநிலை நகராட்சியாகவும், 30 மே 1988 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
பின்பு 2019ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி அறிவித்துள்ளார்.[2][3]இம்மாநகராட்சி 52 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.
Remove ads
மாநகராட்சி உறுப்பினர்கள்
நாகர்கோவில் மாநகராட்சி
நிர்வாகப் பகுதிகள்
24.27 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி, முந்தைய நாகர்கோவில் கிராமம், வடிவீஸ்வரம் கிராமம், வடசேரி கிராமம், நீண்டகரை கிராமங்களைக் கொண்டிருந்தது. தற்போது ஆசாரிப்பள்ளம் பேரூராட்சிப் பகுதியை நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி 52 உறுப்பினர்கள் கொண்ட மன்றமாக செயல்படுகிறது.
2021-இல் இணைக்கப்பட்ட பகுதிகள்
அக்டோபர், 2021 முதல் நாகர்கோவில் மாநகராட்சியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகிறது.[4]
Remove ads
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாகர்கோவில் மாநகராட்சியின் மக்கள் தொகை 2,24,849 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 1,09,938; பெண்கள் 1,14,911 ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 94.99% ஆகும். மொத்த எழுத்தறிவு உடையவர்கள் 1,94,361 ஆகும். அதில் ஆண்கள் 96,454 நபர்களும்; பெண்களில் 97,907 பேரும் எழுத்தறிவு உடையவர்கள். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1045 பெண்கள் வீதம் உள்ளனர்.
மக்கள் தொகையில் இந்துக்கள் 1,37,301 (61.06%), கிறித்தவர்கள் 67,329 (29.94%), இசுலாமியர்கள் 19,982 (8.89%), பௌத்தர்கள் 38 (0.02%), சமனர்கள் 42, சீக்கியர்கள் 25 மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் 132 ஆக உள்ளனர். [5]
Remove ads
மாநகராட்சி தேர்தல், 2022
2022-ஆம் ஆண்டில் நாகர்கோவில் மாநகராட்சியின் 52 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 32 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 11 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், சுயேச்சைகள் 2 வார்டுகளையும் கைப்பற்றினர்.[6]மேயர் & துணை மேயர் தேர்தலில் திமுகவின் மகேஷ் மற்றும் மேரி பிரின்சு தேர்வு செய்யப்பட்டனர்.[7]
Remove ads
ஆன்மிகத் தலங்கள்
- நாகராஜா கோவில்
- புனித சவேரியார் ஆலயம்
- பாவா காசிம் வலியுல்லா பள்ளி வாசல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads