ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (Asian Football Federation-AFC) என்பது ஆசியாவில் சங்க கால்பந்துப் போட்டிகளை நிர்வகிக்கும் அமைப்பாகும். இதில் 46 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன, அவற்றுள் பெரும்பான்மையான நாடுகள் ஆசியாவில் இருக்கின்றன. ஆசிய மற்றும் ஐரோப்பிய எல்லையிலிருக்கும் அனைத்து எல்லைநாடுகளும் (அசர்பைஜான், ஆர்மீனியா, ஜார்ஜியா, கசகஸ்தான், ரசியா, துருக்கி போன்றவை) யூஈஎஃப்ஏவில் உறுப்புநாடுகளாக உள்ளன. இசுரேல் முழுவதுமாக ஆசிய கண்டத்தில் அமைந்திருந்தாலும் யூஈஎஃப்ஏவில் உறுப்புநாடாக உள்ளது. முன்னர் ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்புநாடாகவிருந்த ஆஸ்திரேலியா 2006-லிருந்து ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்புநாடாக உள்ளது. அதைப்போலவே குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகள் ஆகியவையும் ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன.
மே 8, 1954-இல் மணிலாவில், பிலிப்பைன்சு, இக்கூட்டமைப்பு நிறுவப்பட்டது. இது ஃபிஃபாவின் ஆறு கண்ட கூட்டமைப்புகளில் ஒன்றாகும். இதன் தலைமையகம் புகித் ஜலால், கோலாலம்பூர், மலேசியாவில் உள்ளது. இவ்வமைப்பின் தற்போதைய தலைவர் சீனாவைச் சேர்ந்த ழாங் சிலாங் என்பவராவார்.
Remove ads
மேலும் பார்க்க
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads