சபர்மதி ஆசிரமம்

காந்தியம் From Wikipedia, the free encyclopedia

சபர்மதி ஆசிரமம்
Remove ads

சபர்மதி ஆசிரமம் (Sabarmati Ashram, குசராத்தி: સાબરમતી આશ્રમ) அகமதாபாத் நகரின் நகரமண்டபத்திலிருந்து 4 மைல்கள் தொலைவில் சபர்மதி ஆற்றின் கரையில் புறநகர் சபர்மதியின் புகழ்பெற்ற ஆசிரமம் சாலையில் அமைந்துள்ளது. இது காந்தி ஆசிரமம் என்றும் அரிசன் ஆசிரமம் என்றும் சத்தியாகிரக ஆசிரமம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மோகன்தாசு கரம்சந்த் காந்தி 1918 முதல் 1933 வரை இங்கு வாழ்ந்திருந்தார்[1]. இந்திய விடுதலை இயக்கத்தில் 1930ஆம் ஆண்டு நடைபெற்ற தண்டி யாத்திரையில் முக்கிய பங்காற்றிய இவ்விடம் இந்திய அரசால் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் சபர்மதி ஆசிரமம், ஆள்கூறுகள்: ...

சபர்மதி ஆசிரமம் முன்னதாக சத்தியாகிரக ஆசிரமம் என அழைக்கப்பட்டது. அகமதாபாத்தில் இருந்த, ஜீவன்லால் தேசாய் என்ற வழக்கறிஞருக்குச் சொந்தமான, தனியார் மாளிகையில் சத்தியாகிரக ஆசிரமம் இயங்கியது. பின்னரே சபர்மதி ஆற்றின் கரையில் உள்ள தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.[1]

Remove ads

சொத்துவரி சர்ச்சை

சபர்மதி ஆசிரம வளாகத்தில், உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ,மாணவர் விடுதிகள் என 12 வகையான சொத்துக்கள் உள்ளன. இவற்றிற்கு 1960ஆம் ஆண்டில் குசராத்-மகாராட்டிர மாநிலங்கள் இணைந்திருந்த பாம்பே மாநிலத்தின் முதல்வர் மொரார்ஜி தேசாய் முழுமையான சொத்துவரி விலக்கு அளித்தார். தொடர்ந்து அகமதாபாத் நகராட்சித் தலைவராக விளங்கிய, பின்னாள் துணைப் பிரதமர், வல்லபாய் படேல் நிரந்தர வரிவிலக்கு அளித்தார்.[2] 198 முதல் இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியில் இந்த ஆசிரமத்திற்கு சொத்துவரி விதிக்கப்பட்டு 2000ஆம் ஆண்டுவரை செலுத்தப்பட்டு வந்துள்ளது. இத்தொகையை சில சிறப்புச் சலுகைகள் மூலம் திருப்பித் தரப்பட்டது. 2007, 2008 ஆண்டுகளிலிருந்து மீண்டும் சொத்துவரி கேட்பு அறிக்கைகள் பெறப்பட்டன. அரசுகொடை மற்றும் மக்கள் நன்கொடையால் நடத்தப்படும் இந்த ஆசிரமத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என ஆசிரம நிர்வாகம் கோரிக்கை எழுப்பி உள்ளது.[2]

Remove ads

காட்சியகம்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads