அச்சே

இந்தோனேசிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia

அச்சேmap
Remove ads

அச்சே, அச்சி, அல்லது ஆச்சே (Aceh அல்லது Aceh Province; அச்சே: Nanggroë Acèh; இந்தோனேசியம்: Provinsi Aceh) என்பது இந்தோனேசியாவின் மேற்குமுனைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாகாணம் ஆகும். இது இந்தோனேசியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

விரைவான உண்மைகள் அச்சே தாருல் சலாம் Aceh Darussalamاچيه دارالسلام, நாடு ...

இதன் தலைநகரம் பண்டா அச்சே ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் அமைந்துள்ளது. மத ரீதியாக ஆச்சே மாகாணம் ஒரு பழமைவாத பிரதேசம்; மற்றும் சரியா சட்டத்தை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் ஒரே இந்தோனேசிய மாகாணமும் ஆகும். இங்கு 10 வெவ்வேறு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அச்சே இன மக்கள் ஆவர். அச்சே இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு பாறை எண்ணெய், இயற்கை எரிவளி ஆகியவை கிடைக்கின்றன. உலகிலேயே அதிய எரிவளி கிடைக்கும் இடங்களில் இது முன்னணியில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மதப் பழமைவாதக் கொள்கையுடைய மக்கள் அதிகம் வசிக்கு பகுதியாகும்.[3]

Remove ads

அரசு

இந்த அச்சே மாகாணம் சிறப்புத் தன்னாட்சி நிர்வாகப் பகுதியாக கருதப்படுகிறது. எனவே, மற்ற மாகாணங்களைக் காட்டிலும், அதிக அளவில் தன்னாட்சியைக் கொண்டது.

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாகாணம் பதினெட்டு உட்பிரிவுகளாகவும், ஐந்து நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரிய நகரமான பண்டா ஆச்சே, இதன் தலைநகரம் ஆகும்.[4][5]

  • சபாங் மாநகரம் (Sabang City)
  • பண்டா அச்சே (Banda Aceh City)
  • அச்சே மாநகரம்(Aceh Regency)
  • அச்சே பெசார் (Aceh Besar Regency)
  • பிடீ மாநகரம் (Pidie Regency)
  • பிடீ ஜாயா மாநகரம் (Pidie Jaya Regency)
  • பிரியூன் மாநகரம் (Bireuen Regency)
  • மத்திய அச்சே மாநகரம் (Central Aceh Regency)
  • பெனேர் மெரியா மாநகரம் (Bener Meriah Regency)
  • வடக்கு அச்சே மாநகரம் (North Aceh Regency)
  • லொக்சியுமவே (Lhokseumawe City)
  • கிழக்கு அச்சே (East Aceh Regency)
  • தெற்கு அச்சே (South Aceh Regency)
  • லங்சா (Langsa City)
  • அச்சே தமியாங் (Aceh Tamiang Regency)
  • காயோ லூவேசு (Gayo Lues Regency)
  • தென்மத்திய ஆச்சே (South Central Aceh Regency)
  • சுபுலு சலாம் (Subulussalam City)
  • அச்சே சிங்கில் (Aceh Singkil Regency)
  • சிமியுலே (Simeulue Regency)
  • தென்மேற்கு அச்சே (Southwest Aceh Regency)
  • நகன் ராயா (Nagan Raya Regency)
  • மேற்கு அச்சே (West Aceh Regency)
  • அச்சே ஜெயா (Aceh Jaya Regency)
Remove ads

பொருளாதாரம்

2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தால் சீரழிவு ஏற்பட்டு, இந்தப் பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்தப் பகுதி சுனாமி ஏற்பட்ட மையப் பகுதிக்கு அருகில் மிக அமைந்து இருந்தது. அதனால் கிட்டத்தட்ட 170,000 மக்கள் இறந்தனர். ஒரு வருடத்திற்கு பின்னரும் பலர் வீடுகள் இல்லாமல் முகாம்களில் தங்கியிருந்தனர்.[6] இங்கு வாழும் மக்களில் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழான வாழ்க்கை நிலையை கொண்டுள்ளனர்.[7] இந்தப் பகுதியை மறுசீரமைக்க இந்தோனேசிய அரசு ஒரு குழுவை அமைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், அரசு ஆகியவற்றுடன் மக்களும் தங்கள் இருப்பிடங்களை மீளக் கட்டுவிக்கும் பணியை தொடங்கினர். இங்கு சுனாமி நினைவாக அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டது.[8]

Remove ads

சுற்றுச்சுழலும் உயிரிகளும்

இங்கு பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.[9] இங்கு சுமாத்திரா காண்டா மிருகங்கள் (Sumatran rhinoceros), சுமாத்திரா புலி, ஓராங் ஊத்தான் (Orangutan), சுமாத்திரா யானை ஆகிய அரிய உயிரினங்கள் வாழ்கின்றன.[9] இங்கு 460 சுமாத்திரா யானைகள் வசிப்பதாக 2014-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.[10] 1970-ஆம் ஆண்டு முதலே இந்தப் பகுதியில் காடழிப்பு நடந்து வருகிறது.[11]

பண்பாடு

இங்கு அச்சே இன மக்கள், காயோ இன மக்கள், அலாஸ் இன மக்கள், மலாய் மக்கள் உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.[12] இங்கு வாழும் மக்கள் அச்சே மொழியில் பேசுகின்றனர். இது சாமிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இந்த மொழியுடன் தொடர்புடைய மொழிகள் வியட்நாமிலும், கம்போடியாவிலும் வாழும் மக்களால் பேசப்படுகின்றன. இந்த மொழி மலாய் மொழிக் குடும்படுத்துடனும் தொடர்புடையது. இந்த மொழியில் மலாய், அரபு மொழிகளின் தாக்கத்தை உணர முடியும். இந்த மொழி ஜாவி எழுத்துகளில் எழுதப்படுகிறது.

சமயம்

இங்கு வாழும் மக்களில் 98 சதவீதம் பேர் இசுலாமிய சமயத்தை பின்பற்றுகின்றனர். 50,300 மக்கள் புரொட்டஸ்தானத்தையும், 3,310 மக்கள் கத்தோலிக்கத்தையும் பின்பற்றுகின்றனர்.[13]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads