மினாங்கபாவு மக்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மினாங்கபாவு மக்கள் இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திராவிலுள்ள மினாங்கபாவு பெருநிலத்தை சேர்ந்தவர்கள்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

இவர்களின் கலாசாரம் தாய்வழி மரபைச் சேர்ந்தது (Matrilineal). ஒரு குடும்பத்தின் தலைவருக்குரிய தகுதியைப் பெண்கள் பெறுகிறார்கள். சொத்துடைமை; நிலவுடைமை போன்றவை ஒரு தாயிடம் இருந்து ஒரு மகளிடம் போய்ச் சேர்கிறது. அதே சமயத்தில், அரசியல், சமயம் தொடர்பான காரியங்களுக்கு ஆண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள்.

இவர்களின் இத்தகைய கலாசார மரபை அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) என்று மலேசியாவில் அழைக்கிறார்கள். இந்தோனேசியாவில் லாரே புடி கானியாகோ (Lareh Bodi Caniago) என்று அழைக்கிறார்கள். மேற்கு சுமாத்திராவில் மட்டும், 40 இலட்சம் மினாங்கபாவு மக்கள் வாழ்கின்றனர். இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளிலும், மலேசியாவிலும் ஏறக்குறைய 30 இலட்சம் மினாங்கபாவ் மக்கள் வாழ்கின்றனர்.

Remove ads

சொற்பிறப்பியல்

மெனாங் கெர்பாவ் எனும் சொற்கள் திரிந்து மினாங்கபாவு ஆனது. மினாங்கபாவு என்பது மினாங், கபாவ் ஆகிய சொற்களில் இருந்து உருவானது.[5][6] மெனாங் (Menang) என்றால் வெற்றி; கெர்பாவ் (Kerbau) என்றால் எருது என பொருள்படும்.[7] கூட்டுச் சொல்லாக, வெற்றி பெறும் எருது என்று பொருள் படுகிறது.[4][8]

புராணக் கதை

மினாங்கபாவு எனும் சொல் எப்படி உருவானது என்பதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. மினாங்கபாவு மக்களுக்கும் அண்டை மாநிலத்தின் இளவரசருக்கும் ஓர் எல்லைத் தகராறு ஏற்பட்டது. இரண்டு எருதுகளை மோத விட்டால் தகராறு தீர்க்கப்படலாம் என்று மினாங்கபாவு மக்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அண்டை மாநிலத்தின் இளவரசரும் ஒப்புக் கொண்டார்.[9]

அண்டை மாநிலத்தின் இளவரசர் ஒரு பெரிய திடகாத்திரமான எருதைக் கொண்டு வந்தார். மினாங்கபாவு மக்கள் பசியால் வாடி நின்ற ஓர் எருது கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தனர். வயல்காட்டில் பெரிய எருதைப் பார்த்த எருது கன்றுக் குட்டி, பால் குடிப்பதற்காக அதை நோக்கி ஓடியது. சின்னக் கன்றுக் குட்டி தானே என்று பெரிய எருது அசட்டையாக இருந்து விட்டது.[9]

பெரிய எருதின் மடியில் பால் குடிக்க முயற்சி செய்த போது, கன்றுக் குட்டியின் கூரிய கொம்புகள் பாய்ந்து பெரிய எருமை இறந்து போனது. அந்த வகையில் மினாங்கபாவ் மக்கள் வெற்றி பெற்றனர். எல்லைத் தகராறும் தீர்ந்து போனது.[9]

Remove ads

வரலாறு

14-ஆம் நூற்றாண்டில், ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி, மஜபாகித் பேரரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்த ஆதித்தியவர்மன் என்பவர் மினாங்கபாவு பேரரசைத் தோற்றுவித்தார்.[10][11] மினாங்கபாவ் பீடபூமியில் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்த ஆதித்தியவர்மன் புத்த சமயத்தைச் சார்ந்தவர். 1347-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை மினாங்கபாவு பேரரசை ஆட்சி செய்தார்.

மத்திய சுமத்திராவில் ஒரு மாநிலமாக இருந்த மலையபுரத்தின் அரசராக இருந்தவர் ஆதித்தியவர்மன். இந்த மலையபுரம் (Malayapura), இப்போது பகாருயோங் (Pagarruyung) என்று அழைக்கப்படுகிறது.[12][13]

ஆதித்தியவர்மன்

1309-இல் இருந்து 1328 வரை, மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த செயநகரன் என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆதித்தியவர்மன். மஜபாகித் பேரரசின் அரசர் திரிபுவனராஜா என்பவரின் பேரனும் ஆவார். மஜபாகித் பேரரசின் மூத்த அமைச்சராக இருந்த போதுதான் மினாங்கபாவு பேரரசை ஆதித்தியவர்மன் தோற்றுவித்தார்.[11]

ஆதித்தியவர்மன் மறைந்த பிறகு, மினாங்கபாவ் பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்தன. மூன்று அரசர்கள் தனித்தனியாக ஆட்சி செய்தனர். ராஜா ஆலாம், ராஜா ஆடாட், ராஜா இபாடாட் எனும் மூன்று அரசர்கள். சுருக்கமாக ராஜா தீகா செலோ (Rajo Tigo Selo) என்று அழைக்கப் பட்டார்கள்.[14][15]

Remove ads

படத் தொகுப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads