இந்தோனேசிய நிலப் பகுதிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தோனேசிய நிலப் பகுதிகள் அல்லது இந்தோனேசிய ஆட்சிப் பகுதிகள் (ஆங்கிலம்: Regions of Indonesia இந்தோனேசியம்: Wilayah di Indonesia) என்பது இந்தோனேசியாவின் நிலப் பகுதிகள் அல்லது நிலப் பிராந்தியங்கள் அல்லது நில வட்டாரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுவதாகும்.

இந்தோனேசியாவின் நிர்வாக மண்டலங்கள் பல பகுதிகளாக மத்திய அரசாங்கத்தால் பிரிக்கப்பட்டு; சட்டம் அல்லது ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தோனேசியாவின் நிலப் பகுதிகள், ஏழு புவியியல் கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
Remove ads
புவியியல் அலகுகள்

ID-SM
ID-JW
ID-KA
ID-NU
ID-SL
ID-ML
ID-PP
ISO 3166-2:ID-இன் படி, இந்தோனேசியா ஏழு புவியியல் அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வோர் அலகும் பெரிய தீவுகள் அல்லது ஒரு தீவுக் குழுவைக் கொண்டுள்ளது. அந்தப் புவியியல் அலகுகள் பின்வருமாறு:
பிரிவுகள்
Remove ads
கிழக்கு இந்தோனேசியா; மேற்கு இந்தோனேசியா

டச்சு ஆட்சி
டச்சு காலனித்துவ ஆட்சியின் கடைசிக் கட்டங்களில், ஜாவா மற்றும் கலிமந்தானுக்கு கிழக்கே உள்ள பகுதி பெரும் கிழக்கு என்றும் பின்னர் கிழக்கு இந்தோனேசியா என்றும் அறியப்பட்டது. 24 டிசம்பர் 1946 இல், அதே பகுதியை உள்ளடக்கிய கிழக்கு இந்தோனேசியா மாநிலம் மேற்கு நியூ கினி தவிர) உருவாக்கப்பட்டது.
இது இந்தோனேசியாவின் ஐக்கிய மாநிலங்களின் ஓர் அங்கமாக இருந்தது, மேலும் 17 ஆகத்து 1950-இல் இந்தோனேசியாவின் ஒற்றையாட்சிக் குடியரசில் கலைக்கப்பட்டது.[2]
கிழக்கு இந்தோனேசியாவின் 17 பிரிவுகள்
தற்போது, கிழக்கு இந்தோனேசியா 17 பிரிவுகளைக் கொண்டுள்ளது: பாலி, கிழக்கு நூசா தெங்காரா, மேற்கு நூசா தெங்காரா, மத்திய சுலாவெசி, கோரோந்தாலோ, வடக்கு சுலாவெசி, தெற்கு சுலாவெசி, தென்கிழக்கு சுலாவெசி, மேற்கு சுலாவெசி, மலுக்கு மாகாணம், வடக்கு மலுக்கு மாகாணம், மத்திய பாப்புவா, உயர்நில பாப்புவா, பாப்புவா பிரிவு, தெற்கு பாப்புவா, தென்மேற்கு பாப்புவா, மேற்கு பாப்புவா (மாகாணம்).[3][4][5]
மற்ற 21 பிரிவுகளை உள்ளடக்கிய பிராந்தியம் சுமாத்திரா, சாவகம் (தீவு), கலிமந்தான் என அறியப்படும் மேற்கு இந்தோனேசியா.[6]
வளர்ச்சிப் பகுதிகள்
தேசிய வளர்ச்சித் திட்டமிடல் நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி, இந்தோனேசியா நான்கு முக்கிய வளர்ச்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் மேடான், ஜகார்த்தா, சுராபாயா, மக்காசார் ஆகிய முக்கிய நகரங்களால் வழிநடத்தப்படுகின்றன, .[7][8][9]

Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads