ஆடாதோடை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆடாதோடை (ⓘ) அல்லது ஆடாதொடை, வாசை[1][2] (தாவர வகைப்பாடு: Adhatoda zeylanica) என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாகப் பயன்படுகிறது.[3]
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
பெயர்க் காரணம்
இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம் எனப்படுகிறது.[4]
விளக்கம்
இந்தத் தாவரம் முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம். இது கைப்பு சுவை கொண்டது. இந்த மூலிகை வெப்பத் தன்மை (சூடு) கொண்டது எனக் கூறப்படுகிறது.
செய்கைகள்
- கோழையகற்றி
- நுண்புழுக்கொல்லி
- சிறுநீர் பெருக்கி
- வலிநீக்கி
முக்கிய வேதிப்பொருள்கள்
ஆடா தொடையில் இலைகளில் டானின், அல்கலாய்டுகள். சப்பொனின், பீனாலிக்சு, பிளாவநாய்டுகள்,[5] வாசிசின்,[6] வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ் முதலியன காணப்படுகின்றன.
மருத்துவ பயன்பாடுகள்
- "ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
- கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
- மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
- அகத்துநோய் போக்கு மறி.”
- - (அகத்தியர் குணவாகடம்)
மேற்கோள்கள்
இவற்றையும் காணவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
