ஆடிப்பெருக்கு (திரைப்படம்)

கே. சங்கர் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஆடிப்பெருக்கு (திரைப்படம்)
Remove ads

ஆடிப்பெருக்கு (ஒலிப்பு) 1962 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் ஆடிப்பெருக்கு, இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

பத்மா தன் விதவைத் தாயார் பார்வதியுடனும் துறைமுகத்தில் வேலை பார்க்கும் தம்பியுடனும் வாழ்ந்து வருகிறாள். ஒரு கவிஞனான ராஜா இவர்களுக்கு தங்கியிருக்க இடம் கொடுத்திருக்கிறான். பத்மா ராஜாவை விரும்புகிறாள். பத்மாவின் தம்பி ஒரு விபத்தில் இறந்து விடுகிறான். ஒரு நல்லவரின் உதவியுடன் ராஜா வாய்ப்புகளைப் பெருக்க, சென்னை செல்கிறான். அங்கே ராமலிங்கம் என்ற ஒரு வெளியீட்டாளரைச் சந்திக்கிறான். அவர் மூலம் அவனது புத்தகங்கள் நன்றாக விற்பனையாகின்றன. வெளியீட்டாளரின் மகள் லதா, ராஜாவைக் காதலிக்கிறாள். இதனை அறிந்த பத்மா விரக்தியில் நோயாளியான ஒருவரை திருமணம் செய்கிறாள். அவரும் இறந்து விடுகிறார். ராஜாவுக்கும் லதாவுக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் பத்மா கல்யாண மண்டபத்துக்கு வருகிறாள். அவளைக் கண்ட ராஜா மனக்குழப்பமடைந்து கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறுகிறான். இதனைக் கண்டு லதாவின் தந்தை நோயாளியாகிறார். லதாவின் திருமணம் நடந்தால் தான் அவரது நோய் குணமாகும் என டாக்டர் சொல்கிறார். அவருக்கு நன்றிக்கடன் பட்ட ராஜா, லதாவைத் திருமணம் செய்கிறான். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை மயக்கமடைகிறது. குழந்தையின் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரைக் கொடுக்க முன்வருகிறாள் பத்மா. குழந்தை பிழைக்கிறது. பத்மா இறக்கிறாள்.[1]

Remove ads

நடிகர்கள்

[1]

தயாரிப்பு

ஆடிப்பெருக்கு என்பது தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கும் நீருக்கு நன்றி செலுத்தும் இவ்விழாவைத் தலைப்பாகக் கொண்டுள்ள இத்திரைப்படத்தில் தலைப்புப் பாடலாக ஒலிக்கும் அன்னையின் அருளே வா என்ற பாடலைத் தவிர விழாவுக்கும் திரைப்படத்துக்கும் வேறு தொடர்பு இல்லை.
தற்போது மூடப்பட்டுவிட்ட மெஜஸ்டிக் கலையகத்தில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. காவேரியின் அழகு மிகு காட்சிகளை தம்பு சிறந்த முறையில் படமாக்கியுள்ளார்.[1]

பாடல்கள்

இத்திரைப்படத்தில் ஒன்பது பாடல்கள் உள்ளன. ஏ. எம். ராஜா இசையமைத்துள்ளார். பாடல்களை கொத்தமங்கலம் சுப்பு, கே. டி. சந்தானம், கண்ணதாசன், சுரதா ஆகியோர் இயற்றியுள்ளனர்.[2][3]

மேலதிகத் தகவல்கள் ஆடிப்பெருக்கு பாடல்கள், # ...
Remove ads

வரவேற்பு

திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை இத்திரைப்படம் பற்றிக் குறிப்பிடும் போது, தலைப்புடன் தொடர்பில்லாத அதே சமயம் எதிர்பார்க்கப்பட்ட முடிவைக் கொண்டிருந்த கதை என்பதாலும், கதையில் வரும் அதிகமான சாவுகளாலும், இந்த திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை எனக் கூறியுள்ளார். ஆயினும் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி இருவரின் நடிப்பும் குறிப்பிடத் தகுந்தது என்றும் கூறியுள்ளார்.[1]

சான்றாதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads