ஆண்டிமனி(III) ஆக்சைடு ஐதராக்சைடு நைட்ரேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டிமனி(III) ஆக்சைடு ஐதராக்சைடு நைட்ரேட்டு (Antimony(III) oxide hydroxide nitrate) என்பது Sb4O4(OH)2(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆண்டிமனியின் ஒரு சில நைட்ரேட்டுகளில் இதுவும் ஒன்றாகும். ஆண்டிமனியின் எளிய முந்நைட்ரேட்டு சேர்மம் எதுவும் அறியப்படவில்லை. எக்சு கதிர் படிகவியல் ஆய்வின்படி, ஆண்டிமனி ஆக்சைடு/ஐதராக்சைடின் நேர்மின் அடுக்குகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நைட்ரேட் அயனிகள் கொண்ட கட்டமைப்பைப் பெற்றுள்ளது. ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து 110 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் ஆண்டிமனி(III) ஆக்சைடு ஐதராக்சைடு நைட்ரேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads