ஆதித்தியவர்மன்

சுமாத்திரா மலையபுரம் இராச்சியத்தின் பேரரசர் From Wikipedia, the free encyclopedia

ஆதித்தியவர்மன்
Remove ads

ஆதித்தியவர்மன் அல்லது இராஜேந்திர மௌலிமாலி வர்மதேவா ஆங்கிலம்; மலாய்: Adityawarman; இந்தோனேசியம்: Sang Arya Dewaraja Mpu Aditya) மினாங்கபாவு மொழி: Maharajo dirajo Adityawarman; Maharajadiraja Srīmat Srī Udayādityawarma Warmadewa) என்பவர் மேற்கு சுமாத்திராவின் சுவர்ணபூமி மலையபுரம் இராச்சியத்தின் பேரரசர்; மத்திய சுமாத்திராவை தளமாகக் கொண்ட மௌலி வம்சத்தின் வாரிசு ஆவார்.

விரைவான உண்மைகள் ஆதித்தியவர்மன் Adityawarman, ஆட்சிக்காலம் ...

1309 முதல் 1328 வரை மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த செயநகரனின் உறவினரும், மெலாயு இராச்சியத்தின் மன்னரான திரிபுவனராஜாவின் பேரனும் ஆவார்.[1] ஆதித்தியவர்மனுக்கு மஜபாகித்தின் மூத்த மந்திரி (Wreddamantri) பதவி வழங்கப்பட்டது.

அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மஜபாகித் இராணுவ விரிவாக்கத் திட்டங்களைத் தொடங்கினார். அதன் பின்னணியில் சுமத்திராவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றினார். பின்னர் பகாருயோங்கில் மினாங்கபாவு அரச வம்சத்தை நிறுவினார். மற்றும் 1347 மற்றும் 1375-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தங்க வர்த்தகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற, மஜபாகித் பேரரசின் மத்திய சுமத்திரா பிராந்தியத்திற்கும் தலைமை தாங்கினார்.

Remove ads

வாழ்க்கை வரலாறு

ஆதித்தியவர்மன் 1294-ஆம் ஆண்டு மஜபாகித் இராச்சியத்தின் கிழக்கு ஜாவா, தலைநகரான துரோவுலான் பகுதியில் பிறந்தார். அவரின் பிறப்பு குறித்து பாரத்தோன் (Pararaton) ஜாவானிய வரலாற்று கவிதைத் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]

மேற்கு சுமத்திராவின் லிமோ கௌம் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குபுராஜோ (Kuburajo I Inscription) கல்வெட்டுப் பதிவுகளின் படி, ஆதித்யவர்மனின் தந்தையார் மஜபாகித் அரச பிரபு வழியைச் சேர்ந்த ஆதவயாவர்மன் என அறியப்படுகிறது. மேலும் அவரின் தாயார் தாரா சிங்கா, தர்மசிரயா அரசைச் சேர்ந்த மலாய் இளவரசி என்றும் பாரத்தோன் வரலாற்று கவிதைத் தொகுப்பு பதிவு செய்துள்ளது.[4][3][4]

ஒரு சீன நாட்டுச் சான்று, செங்கியா-லீ-யு-லான் (செங்கல்ராயன்) என்று ஆதித்தியவர்மனைக் குறிப்பிடுகிறது. 1325-இல் ஆதித்தியவர்மன், ஓர் அரசதந்திரப் பயணத்தின் வழி, மஜபாகித் இராச்சியத்தின் தூதுவராகச் சீனாவுக்குச் சென்றிருக்கலாம்.[5]

வரலாற்றுச் சான்றுகள்

1343-ஆம் ஆண்டில் கிழக்கு ஜாவா சாகோ சரணாலயலயத்தில் கண்டெடுக்கப்பட்ட போதிசத்துவர் மஞ்சுசிறீ ஓவியத்தில் ஆதித்தியவர்மனின் பெயர் காணப்படுகிறது.[6]:232 சாகோ சரணாலயலம் என்பது கீர்த்தநாகரன் எனும் சிங்காசாரி மன்னர் அவரின் தந்தை விசுணுவர்தனுக்காக கட்டப்பட்ட சரணாலயம் ஆகும்.[7] ஆதித்தியவர்மனைப் பற்றிய பல்வேறு கல்வெட்டுகளில் ஒன்றில், ஆதித்தியவர்மன் தம்மை வெளிப்படையாக தங்க பூமியின் இறைவன் (கனகமேதினிந்திரா) என்று அழைக்கின்றார் எனவும் பதிவு செய்யப்பட்டு உள்லது

1960-களில், மேற்கு சுமாத்திரா, ரம்பகான் எனும் இடத்தில் அமோகபாசா கல்வெட்டு (Amoghapasa inscription) கண்டெடுக்கப்பட்டது. 1347-ஆம் ஆண்டு செதுக்கப்பட்ட அந்தச் சிலையின் பின்புறத்தில், மலாய் சமசுகிருத மொழியில், ஆதித்தியவர்மனைப் பற்றிய வாசகங்கள் உள்ளன. அந்த வாசகங்களில் மலையபுர மக்களின் பாதுகாப்பாளராகவும் நலன்புரி ஆதாரவாலராகவும் ஆதித்தியவர்மன் ஆற்றிய பணிகள் குறிப்பிடப்பட்டு உள்ளன.[8]

அரச பட்டப் பெயர்கள்

ஆதித்யவர்மனின் இராச்சியம், இந்தோனேசியாவில், இன்றைய மினாங்கபாவு மக்களின் தாய்வழி சமூகத்தின் முன்னோடி என்று நம்பப்படுகிறது. மலையபுரத்தில், ஆதித்யவர்மனின் அரச பட்டப் பெயர்கள்:"[6]:232

  • உதயாதிய வர்மன்
  • தித்ய வர்மோதயா
  • பிரதாப பராக்கிரம மௌலிமலி வர்மதேவா

சுமத்திரா ஆட்சியாளராக அவர், வச்சிரயான பௌத்தத்தின் பக்தர் என்பதை ஆதித்யவர்மனின் கல்வெட்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆதித்யவர்மன் 1375-ஆம் ஆண்டு வரை மலையபுரத்தை ஆட்சி செய்தார்.[6]:242–243 இவரின் மகனின் பெயர் அணங்கவர்மன்.[9][6]:243

ஆதித்தியவர்மன் அருங்காட்சியகம்

இந்தோனேசியா, மேற்கு சுமாத்திரா, பாடாங் நகரில் ஆதித்தியவர்மனுக்காக ஓர் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. அதன் பெயர் ஆதித்திய வர்மன் அருங்காட்சியகம்; (ஆங்கிலம்: Adityawarman Museum). இது ஒரு மாநில அருங்காட்சியகமாகும்.

1979-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி திறப்புவிழா கண்ட இந்த அருங்காட்சியகத்தில், மேற்கு சுமாத்திரா மாநிலத்தின், மினாங்கபாவு மற்றும் மெண்டாவாய் கலாசாரம் தொடர்பான இன வரைவியல் பொருட்களின் சேகரிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

நூல்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads