ஆதித்திய வர்மன் அருங்காட்சியகம்

From Wikipedia, the free encyclopedia

ஆதித்திய வர்மன் அருங்காட்சியகம்map
Remove ads

ஆதித்திய வர்மன் அருங்காட்சியகம் (ஆங்கிலம்: Adityawarman Museum) இந்தோனேசியாவின் பாடாங்கில் அமைந்துள்ள ஒரு மாநில அருங்காட்சியகமாகும். ஆதித்தியவர்மன் அருங்காட்சியகம், மேற்கு சுமாத்திராவின் மாநில அருங்காட்சியகம் (Museum Negeri Sumatera Barat) என அலுவல்பூர்வமாக அழைக்கப்படுகிறது.

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

இந்த அருங்காட்சியகத்தில் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின், குறிப்பாக மினாங்கபாவு மற்றும் மெண்டாவாய் கலாசாரம் தொடர்பான இன வரைவியல் பொருட்களின் சேகரிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Remove ads

வரலாறு

அருங்காட்சியத்திற்கான ஆலோசனை முதலில் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின் கலாச்சார கல்வித் துறையின் தலைவர் அமீர் அலியால் முன்மொழியப்பட்டது. அதன் அசல் முன்மொழிவு ஒரு 'மினாங்கபாவு கலாசாரம் கூடம்' உருவாக்கமாக இருந்தது. அந்த ஆலோசனையை மேற்கு சுமாத்திரா ஆளுநருக்கு முன்மொழிந்தவர் அருன் அல் ராசித் ஜைன் என்பவராவர். அதே நேரத்தில் இந்த ஆலோசனைக்கு தேசிய அதிகாரிகள் சாதகமாக பதிலளித்தனர். எனவே மேற்கு சுமாத்திரா மாகாணத்திற்கான அரச அருங்காட்சியகம் கட்டப்பட்டது.

அருங்காட்சியத்துக்கான கட்டுமானம் 1974-ஆம் ஆண்டு 2.6 எக்டர் (6.4 ஏக்கர்) நிலப்பரப்பில் துவங்கியது. கட்டுமானம் முடிய சுமார் 3 ஆண்டுகள் ஆனது. அருங்காட்சியகம் இந்தோனேசியாவின் கல்வி மற்றும் கலாசார அமைச்சின் சியர்பிப் தயேப் அவர்களால் 1977-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

மேற்கு சுமத்திராவின் மாநில அருங்காட்சியகம்

1979-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் நாள், இங்கு 'மேற்கு சுமத்திராவின் மாநில அருங்காட்சியகம்' (Indonesian Museum Negeri Sumatera Barat) என்ற பெயரில் மாநில அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்பட்டு ஆதித்தியவர்மன் பெயர் சூட்டப்பட்டது. இப்பெயர் 14-ஆம் நூற்றாண்டு மினாங்கபாவு பீடபூமியில் உள்ள (Minangkabau Highlands) மலையபுரத்தின் நிறுவனராகவும் மற்றும் ஆட்சியாளராகவும் இருந்த ஆதித்தியவர்மன் என்பவரின் பெயராகும்.

பாடாங் நில நடுக்கத்தின் காரணமாக இந்த அருங்காட்சியகம் பாதிப்படைந்தது. இங்கிருந்த 80 விழுக்காடு பொருட்கள் சேதமடைந்தன.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads