ஆதிபகவன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதிபகவன் (ⓘ) என்னும் தொடரால் இறைவனைத் திருக்குறள் குறிப்பிடுகிறது.[1]
ஆதிபிரான் என்று திருப்பாணாழ்வார் திருமாலைக் குறிப்பிடுகிறார்.[2]
திருமந்திரம் ஆதிபரன் [3] ஆதி பராபரம் [4] ஆதிப்பிரான் [5] ஆதி அனாதி அகாரணி காரணி [6] என்னும் தொடர்களால் சிவபெருமானைக் குறிப்பிடுகிறது.
குடிமக்களை ஆளும் இறைவனைத் திருவள்ளுவர் 'ஆதி' எனக் குறிப்பிடுகிறார்.[7]
பகவு என்னும் சொல்லால் திருவள்ளுவர் தமக்குத் தெரியாமல் பகுதிபட்டிருக்கும் பொருளைக் குறிப்பிடுகிறார். அந்தப் பகவு எள்ளுக்குள் எண்ணெய் போலப் பகவுபட்டிருக்கும் என்பது அவர் விளக்கம்.[8]
Remove ads
வள்ளுவர் (கி.மு. 31) கண்ட இறை
இவற்றால் நாம் அறிவது என்ன?
- அரசனைப் போல இறைவன் தனித்திருந்து நம்மை ஆளும்போது ஆதி.
- உண்ட உணவை நமக்குள் சத்தாக மாற்றித் தரும்போதும், அறிவாக வெளிப்படுபோதும் நமக்குள் பகுதியாக விளங்கும் அவன் பகவு.
- இதுவே ஆதிபகவு.
- உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பது 'இறை'. இறையை இறைவன் என்பதும். 'ஆதிபகவு'-ஐ ஆதிபகவன் என்பதும் நம் கற்பனைச் சொல்லாக்கம். (personification)
தொடர் விளக்கம்
- ஆதிபகவன் - 'சோழமன்னன்', 'கபிலபரணர்' என்பன போன்ற உயர்திணைச் சொற்களின் சேர்க்கை.
- ஆதிப்பிரான் - ஆதியாகிய பிரான்
உவமை விளக்கம்
- மேலே கண்ட விளக்கங்களைப் புரிந்துகொள்வதற்குத் திருவள்ளுவர் ஓர் உவமையைத் தந்துள்ளார். [அ] எழுத்தொலி மொழியிலுள்ள ஏனைய எழுத்தொலிகள் எல்லாவற்றிற்கும் முதலாய் விளங்குவது போல 'ஆதிபகவன்' உலகுக்கு முதலாய் விளங்குகிறான் என்கிறார். ஆதிபகவன் என்று முருகப்பெருமானை தான் சொல்கிறார் திருவள்ளுவர்.
- வாய் திறக்கும் முதல் முயற்சியில் பிறப்பது [அ].[9] உயிர் எழுத்துக்கள் எல்லாவற்றுக்குள்ளும் [அ] ஒலி உள்ளது. தனித்து இயங்கமுடியாத மெய்யெழுத்துக்கள் [அ] ஒலியுடன் கூடி ஒலிக்கின்றன. அதுபோல ஆதிபகவன் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், உடல்களுக்கும் முதலாய் விளங்குகிறான். 'உலகு' என்னும் சொல் உலவும் உரு, அரு ஆகிய அனைத்தையும் குறிக்கும்.[10]
- ஆதிபகவன் = internal, initiative and inventive extension.
- ஆதி = The Extensive
- பகவு = The Intensive
Remove ads
அறிஞர் கண்ட விளக்கம்
ஆதிபகவன் என்னும் தொடருக்கு அறிஞர் கண்ட விளக்கங்கள்
- மணக்குடவர் – ஆதியாகிய பகவன்
- பரிதியார் – ஆதியான பகவன்
- காலிங்கர் – மூல காரணன்
- பரிமேலழகர் – ஆதிபகவன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வடநூல் முடிபு
- புலவர் குழந்தை – அறிவின் முதன்மையும் பகுதியும், மக்கள் முதன்மையான அறிவுடையவராய் வாழவேண்டும் என்கிறார் வள்ளுவர்.
- ’ஆதி’ தமிழ்ச்சொல்
- பரிமேலழகர் ஆதிபகவன் என்னும் தொடரை வடநூல் முடிபு எனக் கூறுவது இரண்டு வடசொற்களால் ஆய தொடர் என்றபடி. ஆதல் என்னும் வினைப்பெயர் தமிழ்.[11] ஆதும் என்பது அதன் வினைச்சொல் [12] ஆதல் நிகழும் முதல் ஆதி.
- ’பகவன்’ தமிழ்ச்சொல்
- எள்ளின் பகவாகிய எண்ணெய் போலக் கலந்திருப்பவனைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.[13]
Remove ads
மேலும் காண்க
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads