இறை வணக்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இறைவனை வணங்குவதற்குத் திருவள்ளுவர் எந்த ஒரு முறையையும் குறிப்பிடவில்லை. இறைவனின் தாள் தொழு, தாள் சேர், தாளை வணங்கு, அடி சேர், பொருள்சேர் புகழ் புரி, பொய்தீர் ஒழுக்கநெறி நில் எனப் பொதுப்படக் கூறுகிறார். இவற்றை விளங்கிக்கொள்வோம்.

  • இறைவன் தாள்
  • இறைவன் அடி
  • இறைவன் பொய்தீர் ஒழுக்க நெறி
  • இறைவன் பொருள்சேர் புகழ்

என்றெல்லாம் குறிப்பிடும்போது இறைவன் மனித உருவில் வாழும் தெய்வம் எனக் காட்டுகிறார். இறைவனுக்குத் தாள் என்னும் முயற்சி உண்டு. இறைவன் அடி எடுத்து நடக்கிறான் (ஏகினான்). இறைவன் பொய்தீர் ஒழுக்க நெறியில் நிற்கிறான். அதனால் அவனைச் சேரும் புகழே பொருள் புகழ். - என்றெல்லாம் கூறுகிறார்.

இறைநிலையின் பாங்குகளை அறிவியல் கண்கொண்டு அவர் கூறியிருப்பதை அவர் கூறியுள்ள தொடர்களைக்கொண்டு பல தலைப்புகளில் விளங்கிக்கொண்டோம். வள்ளுவர் காட்டும் இறைநிலைகள் நான்கு எனவும் கண்டோம். அவை நமக்குத் தெரியாமல் நம்மோடு இருக்கும் புதிர்நிலை, மழையாக வழங்கும் கொடைநிலை, வாழ்ந்து காட்டும் நீத்தார்நிலை, கூடிவாழும் அறநிலை என்பன.

இறை என்னும்போது புதிர்நிலை. இறைவன் என்னும்போது தெரிநிலை. ஆதிபகவு என்னும்போது புதிர்நிலை. ஆதிபகவன் என்னும்போது தெரிநிலை.

தெரிநிலைக்குத் தாள் உண்டு. அடி உண்டு. ஒழுக்கநெறி உண்டு. புகழ் உண்டு. தெரிநிலை என்பது வாழ்ந்து வழிகாட்டிய தெய்வம். அந்தத் தெய்வ நெறியைக் காட்டிக்கோண்டு வாழும் தெய்வம் (நீத்தார்). தெய்வப் படிமைகளுமாம்.

மேலதிகத் தகவல்கள் இறைவன், வள்ளுவர் பார்வை ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads