ஆத்திரேலியா (கண்டம்)
கண்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் நிலவியல் ரீதியாக, கண்டம் என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் ஆரு தீவுகள் போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் கண்டத் திட்டுகளின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை அரபூரா கடல், மற்றும் டொரெஸ் நீரிணையாலும், தாஸ்மானியா பாஸ் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளன.
கிமு 18,000 ஆண்டுகளளவில், கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன[1].
நியூசிலாந்து நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான சிலாந்தியாவினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியாவின் பகுதிகளாகும்.
இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads