ஆத்ரேயர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆத்ரேயா (Atreya) (आत्रेय) அல்லது அத்ரேயா புனர்வாஸ் என்பவர் அத்திரி முனிவரின் வழித்தோன்றலாவார். இவர் மிகப் பெரிய முனிவர்களில் ஒருவரான இந்து புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளார். இவர் காந்தார தேசத்தின் தக்சசீலத்தைச் சேர்ந்தவர்.
மகாபாரதம் குறிப்பிடப்படும் காந்தார நாட்டு அரசர் நாகசித்தின் தனி மருத்துவராக பணியாற்றியவர் என கருதப்படுகிறது.[1]
இவர் ஆயுர்வேத மருத்துவத்தில் வல்லமை மிக்கவர். இவருடைய ஆறு சீடர்கள் அக்னிவேசர், பராசரர், ஹராசுரர், பேலர், ஜடகரணி, ஷர்ப்பணி ஆகியோர் ஆறு ஆயுர்வேத மருத்துவப் பள்ளிகளை தோற்றுவித்துனர். அக்னிவேச சம்ஹிதை மற்றும் பேல சம்ஹிதை ஆகிய புத்தகங்களைசரகர் தன்னுடைய சரக சம்ஹிதையில் பல இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். சரக சம்ஹிதை 1880 இல் தெலுங்கு மொழியில் பனையோலை பதிப்பாக கண்டறியப்பட்டுள்ளது. அது தற்போது தஞ்சாவூர் சரபோஜி மன்னர் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. [2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads