ஆனந்தி சூர்யப்பிரகாசம்

From Wikipedia, the free encyclopedia

ஆனந்தி சூர்யப்பிரகாசம்
Remove ads

ஆனந்தி சூர்யபிரகாசம் (இறப்பு: 21 பெப்ரவரி 2025) இலங்கைத் தமிழ் வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பணிபுரிந்தவர்.

விரைவான உண்மைகள் ஆனந்தி சூர்யப்பிரகாசம், இறப்பு ...

இலங்கை வானொலியில், சானா சண்முகநாதன் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நாடகங்களில் நடித்தவர். அறிவிப்பாளராகவும் இருந்தார். பின்னர் இங்கிலாந்து குடியேறியபின் 1970களில் பிபிசி தமிழோசையில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்ற ஆரம்பித்தவர். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு நிரந்தர அறிவிப்பாளராகவும், நேர்முகம் காண்பவராகவும் பணியாற்றி 2005-இல் ஓய்வு பெற்றார்.[1] சீர்காழி கோவிந்தராஜனின் இலண்டன் கச்சேரிக்கு இவர் செய்த அறிமுகம் இவரைப் பலருக்கு தெரியவைத்தது. பன்னாட்டு தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.[2] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை இரண்டு முறை நேரில் நேர்காணல் செய்தார்.[3]

Remove ads

இறப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தி 2025 பெப்ரவரி 21 அன்று இலண்டனில் காலமானார்.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads