ஆபிரகாம் ஒப்பந்தங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது இஸ்ரேல், ஐக்கிய அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஆகஸ்ட் 13, 2020 அன்று வெளியிட்ட அமைதி ஒப்பந்தமாகும். பின்னர் இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் இடையேயான அமைதி ஒப்பந்தத்துக்கும் இதே பெயரே பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அவர்களால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தங்களின் மூலம் இஸ்ரேல் உடனான உறவை சுமூகமாக்கி கொள்வதாக ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் அறிவித்தன. [1]
1994 ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டுடனான அமைதி ஒப்பந்தத்துக்கு பிறகு அரபு நாடுகளுடன் இஸ்ரேல் மேற்கொள்ளும் அமைதி ஒப்பந்தம் இதுவாகும்
Remove ads
பெயர் காரணம்
யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என மூன்று மதங்களாலும் முக்கிய தீர்க்கதரிசியாக கருதப்படும் முதுபெரும் தந்தை ஆபிரகாம் பெயரே இந்த அமைதி ஒப்பந்தத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.
பின்னணி
1948 ஆம் ஆண்டு உருவான இஸ்ரேல் என்கிற தேசத்தை பல இஸ்லாமிய நாடுகள் அங்கீகரிக்கவில்லை. குறிப்பாக தீர்வு எட்டப்படாத பாலஸ்தீன பிரச்னை இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையேயான உறவை சிக்கலாக்கின. அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் பதவி ஏற்றபின் இருதரப்புடனும் பேச்சு நடத்தி அமைதி ஒப்பந்தம் ஏற்பட முனைப்பு காட்டினார். அதன் விளைவாக இஸ்ரேல் உடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதாக ஐக்கிய அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் அறிவித்தன
Remove ads
கையெழுத்து
அமெரிக்க அதிபர் முன்னணியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அமீரக வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் மற்றும் பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோர் செப்டம்பர் 15, 2020 அன்று ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கூட்டாக கையெழுத்திட்டனர்[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads