ஜோர்தான்
மேற்காசியாவிலுள்ள ஒரு நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோர்தான் (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. அக்கபா குடாவினதும் இறந்த கடலினதும் கரைகள் யோர்தானுக்கும் இசுராலுக்குமிடையே பகிரப்பட்டுள்ளது. யோர்தான் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். அரசன் நாட்டின் தலைவரும் தலைமை நிறைவேற்றுனரும் இராணுவப்படைகளின் கட்டளை அதிகாரியுமாவார். அரசன் அவரது நிறைவேற்றதிகாரத்தை பிரதமரூடாகவும் அமைச்சரவையூடாகவும் செயற்படுத்துகிறார். அம்மான் இதன் தலைநகரம் ஆகும். நவீன தர அரேபியம் இதன் அலுவல் மொழியாகும்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads