ஆப்பிரிக்கச் சிறுமான்

From Wikipedia, the free encyclopedia

ஆப்பிரிக்கச் சிறுமான்
Remove ads

ஆப்பிரிக்கச் சிறுமான் அல்லது இம்பாலா (Impala) என்பது நடுத்தர அளவுள்ள ஆபிரிக்காவைச் சேர்ந்த ஓர் மறிமான் ஆகும். இம்பாலா என்ற பெயர் சுலு மொழியில் இருந்து பெறப்பட்டது. இது ஆபிரிக்காவில் உள்ள புல்நிலங்களிலும் புதர்நிலங்களிலும் வாழ்கிறது.

விரைவான உண்மைகள் ஆப்பிரிக்கச் சிறுமான், காப்பு நிலை ...
Remove ads

தோற்றம்

Thumb
நன்கு வளர்ந்த ஓர் ஆண் சிறுநவ்வி-மிக்குமி தேசியப்பூங்கா, தன்சானியா

இதன் உயரம் 75 செ. மீ. முதல் 95 செ. மீ. வரை இருக்கலாம். ஆண் சிறுநவ்வி 40 முதல் 80 கிலோ எடை வரையும் பெட்டைகள் 30 முதல் 50 கிலோ எடை வரையும் இருக்கும். பொதுவாக இவை சிவந்த பழுப்பு நிறத்துடனும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் பின்புறம் கருப்பு நிறத்தில் ஆங்கில எழுத்து 'M' போன்ற குறியுடனும் இருக்கும். ஆண்களுக்குக் முறுக்கிய கொம்புகள் உண்டு. 90 செ. மீ. நீளம் வரை வளரும். பெட்டைகளுக்குக் கொம்புகள் கிடையாது. ஆபிரிக்காவில் மிகச்சில இடங்களில் காணப்படும் கறுப்புச் சிறுநவ்வி மிகவும் அரியது.

Remove ads

இயல்பு

Thumb
குதித்துத் தாவும் சிறுநவ்வியொன்று

வறட்சியான காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் இவை இருந்தாலும் போதுமான பசுந்தீவனம் கிடைக்கும் நிலையி்ல் இவற்றால் சில வாரங்கள் வரை கூட நீர் அருந்தாமல் இருக்க இயலும். மேய்ச்சலுக்கு என்று தனியே நேரம் கிடையாது. இரவு, பகல் எந்த நேரமும் புற்களை மேயும். ஒ்வொரு ஆண் மானும் ஓழ் எல்லை அமைத்து அந்த எல்லைக்குள் பல பெண் மான்களுடன் வாழ்கிறது. இந்த எல்லைக்குள் வேற் ஆண் மான்களை அனுமதிப்பதில்லை.

குட்டி ஆண் மான்கள் தனியே மந்தையாக வாழ்கின்றன. இவற்றின் இந்த கூட்டு வாழ்க்கை ஆறு மாதங்கள் நீடிக்கும். பின்னர் இவை பெரிய ஆண் மான்களோடு சேர்ந்துவிடும். இவற்றோடு வாழும்போது இனச் சேர்கைக்கு தயாராகக்கூடிய வளர்ச்சி பெற்றுவாடும்.

மிரண்ட நிலையில் சிறுநவ்விகள் தாவிக்குதித்துச் சென்று கொன்றுண்ணிகளைக் குழப்பமடையச் செய்கின்றன. இவற்றால் பத்து மீட்டர் நீளம் வரையும் 3 மீட்டர் உயரம் வரையும் குதித்துத் தாவிச் செல்ல இயலும். மேலும் இவற்றைக் கொல்லும் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க இவற்றால் மணிக்கு 90 கி. மீ. கதியில் ஓட இயலும்.

Remove ads

இனப் பெருக்கம்

இந்த மான்கள் கர்ப காலம் 6½ இலிருந்து 7 மாதங்கள் ஆகும். கர்ப காலத்திற்குப் பிறகு ஒரு குட்டியை பெற்றெடுக்கின்றது. குட்டியை நண்பகலில் ஈனும். குட்டி ஓரளவு வளரும் வரை புற்களிடையே மறைந்து வாழும்.


சிறுத்தைகள், சிங்கங்கள், காட்டு நாய்கள் முதலிய விலங்குகள் சிறுநவ்விகளை இரையாகக் கொள்கின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads