வெள்ளை மறிமான்

From Wikipedia, the free encyclopedia

வெள்ளை மறிமான்
Remove ads

ஆப்பிரிக்கமான் (Addax, Addax nasomaculatus), வெள்ளை மறிமான் அல்லது திருக்குக்கொம்பு மறிமான் எனப்படுவது சகாரா பாலைவனத்தை பூர்வீகமாக கொண்டு வாழும் ஆப்பிரிக்க மான் இனத்தின் மறிமான் ஆகும். இது அடாக்ஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினராகும். இது முதன் முதலில் கென்றி டி பிளய்ன்விலே என்பவரால் 1816 இல் அறிவியல் பூர்வமாக விவரிக்கபட்டது. இதன் பெயருக்கு ஏற்றபடி, வெள்ளை நிறத்தில் இருக்கும். மேலும் இந்த மான் நீண்ட, முறுக்கிய கொம்புகளைக் கொண்டிருக்கும். பொதுவாக பெண் மான்களுக்கு 55 முதல் 80 செமீ (22 முதல் 31 அங்குலம்) நீளமும், ஆண் மான்களுக்கு 70 முதல் 85 செமீ (28 முதல் 33 அங்குலம்) நீளம் வரை கொம்புகள் இருக்கும். ஆண் மான்கள் தோள் வரை 105 முதல் 115 செமீ (41 முதல் 45 அங்குலம்) உயரம் இருக்கும். பெண் மான்கள் 95 முதல் 110 செமீ (37 முதல் 43 அங்குலம்) வரை உயரமாக இருக்கும். இவை பால் ஈருருமை கொண்டவையாக பெண் மான்கள் ஆண் மான்களை விட சிறியதாக இருக்ககும். உடலின் நிறம் பருவத்தைப் பொறுத்தது சற்று மாறுபடும். குளிர்காலத்தில், இது சாம்பல்-பழுப்பு நிறத்திலும், தலை, கழுத்து மற்றும் தோள்களில் நீண்ட, பழுப்பு முடியுடன் இருக்கும். கோடையில், உடல் முற்றிலும் வெள்ளை அல்லது மணல் பொன்னிறமாக மாறும்.

விரைவான உண்மைகள் ஆப்பிரிக்க மான், காப்பு நிலை ...

இந்த மறிமான்கள் பாலைவனத்தில் ஆங்காங்கு வளர்ந்துள்ள புதர்கள், செடிகள், இலைகளை உண்கிறது. இவை நீண்ட காலத்திற்கு தண்ணீர் இல்லாமல் வாழக்கூடியவை என்பதால், இவை பாலைவன வாழ்விடங்களில் வாழ்வதற்கான தகவமைப்பை நன்கு பெற்றுள்ளன. இந்த மான்கள் ஐந்து முதல் 20 உருப்படிகளைக் கொண்ட மந்தைகளாக உள்ளன. இதில் ஆண் மான்களும் பெண் மான்களும் அடங்கி இருக்கும். மந்தையானது மூத்த பெண் மானால் வழிநடத்தப்படுகிறது. இவற்றின் மெதுவான இயக்கங்கள் காரணமாக, அதை வேட்டையாடும் மனிதர், சிங்கங்கள், சிறுத்தைகள், சிவிங்கிப்புலிகள், ஆப்பிரிக்க காட்டு நாய்களின் எளிதான இலக்காக உள்ளது. குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் இவற்றின் இனப்பெருக்க காலம் உச்சத்தில் இருக்கும். இவற்றின் இயற்கையான வாழ்விடமாக வறண்ட பகுதிகள், அரை பாலைவனங்கள் மற்றும் மணல் மற்றும் பாறை பாலைவனங்கள் ஆகும்.

இந்த மறிமான்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், மிக அருகிய இனம் என பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் வகைப்படுத்தபட்டுள்ளது. கட்டுப்பாடற்ற வேட்டையின் காரணமாக இதன் பூர்வீக வாழ்விடங்களில் மிகவும் அரிதாகிப் போயுள்ளது. இவை ஒரு காலத்தில் வடக்கு ஆப்பிரிக்காவில் மிகுதியாக இருந்தன; இருப்பினும் இது தற்போது சாட், மொரிட்டானியா மற்றும் நைஜரை மட்டுமே தாயகமாகக் கொண்டுள்ளது. இது அல்ஜீரியா, எகிப்து, லிபியா, சூடான் மற்றும் மேற்கு சகாராவிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆனால் மொராக்கோ மற்றும் துனிசியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Remove ads

வரலாறு

ஒரு காலத்தில் அரேபியாவிலும், பாலத்தீனத்திலும் இவை பல்லாயிரக் கணக்கில் வாழ்ந்துவந்துள்ளன. பண்டைக் காலத்தில் எகிப்தியர்கள் இந்த மான்களை வீட்டு விலங்காக வளர்த்து வந்துள்ளனர். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைகளில் இந்த மானின் ஓவியங்கள் காணப்பபடுகின்றன. மேலும் அப்போது ஒரு மனிதனின் சொத்து அவன் வளர்க்கும் இந்த மான்களின் எண்ணிக்கையால் நிர்ணயிக்கபட்டது.[4]

விளக்கம்

வெள்ளை மறிமான்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இவற்றின் கால்கள் வெலிந்தவை. ஆனால் தலை மிகப் பெரியது. நெற்றியிலிருந்து கருப்பு உரோமங்கள் கொத்தாக முன்னே வளர்ந்து தொங்கும். இதன் கொம்புகள் நீண்டவை. ஆண், பெண் என இரு பாலினத்திற்கும் கொம்புகள் உண்டு. இதன் குளம்புகள் பக்கங்களில் விரிவடைந்து உள்ளதால் பாலைவன மணல் இவற்றால் எளிதில் நடக்க முடியும்.[5] இவை நான்கு கால்களும் வாசனை சுரப்பிகளைக் கொண்டுள்ளன. இவற்றின் ஆயுட்காலம் காடுகளில் 19 ஆண்டுகள் வரை உள்ளது. இவை சிறைப்பிடிக்கப்பட்டு வளர்க்கப்படும் நிலையில் 25 ஆண்டுகள் வரை வாழக்கூடியன.

Remove ads

நடத்தை

இந்த விலங்குகள் குறிப்பாக கோடையில் இரவாடிகளாக உள்ளன. பகலில், இவை நிழலான இடங்களில் மணலைத் தோண்டி, அந்தப் பள்ளங்களில் ஓய்வெடுக்கின்றன. மேலும் இதன் வழியாக மணல் புயல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றன. வெள்ளை மறிமான் மந்தைகள் ஆண் மான்கள் மற்றும் பெண் மான்கள் என இரண்டையும் கொண்டிருக்கின்றன. மேலும் இவை ஐந்து முதல் 20 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பொதுவாக மந்தையானது ஒரே இடத்தில் தங்கி, உணவைத் தேடி அலைந்து திரிவன. வெள்ளை மறிமான் ஒரு வலுவான சமூக அமைப்பைக் கொண்டுள்ளது, அநேகமாக வயதை அடிப்படையாகக் கொண்டது, மேலும் மந்தைகள் மூத்த பெண் மானால் வழிநடத்தப்படுகின்றது.

தகவமைப்பு

பாலைவனத்தில் வாழ்வதால் நீர் கிடைக்கும் காலத்தில் இவை முகுதியாக நீர் அருந்துகின்றன. நீர் கிடைக்காத காலங்களில் பாலைவனத்தில் வளர்ந்துள்ள தாவரங்களின் மேலே உள்ள நீரைக் கொண்டு சமாள்ளிக்கும். இந்த மான்கள் மோப்ப சக்தி நிறைந்தவை. பாலைவனத்தில் எங்காவது மழை பெய்தால் அதன் மூரம் இவற்றால் அதை அறிந்து கொள்ள முடியும். ஒரு மழையிலேயே சில தாவரங்கள் முளைக்க்கூடியவை என்பதால், அ்விடத்தை நோக்கி கூட்டமாகச் சென்றுவிடும். அங்கு முளைத்துள்ள தாவரங்களை மேயும். இப்படியே இவை நாடோடியார் உணவிற்காக அங்கும் இங்கும் அலையக்கூடியன. இவற்றின் உடல் நிறம் சூரிய ஒளியை எதிரொளிப்பாதாக உள்ளதால், உடலை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது.

Remove ads

இனப்பெருக்கம்

பெண் மான்கள் 2 முதல் 3 வயதிலும், ஆண் மான்களுக்கு சுமார் 2 வயதிலும் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும் நிகழ்கிறது, ஆனால் இது குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் உச்சத்தை அடைகிறது. வடக்கு சகாராவில், குளிர்காலத்தின் இறுதியில் மற்றும் வசந்த காலத்தின் தொடக்கத்தில் இனப்பெருக்கம் உச்சத்தை அடைகிறது; தெற்கு சகாராவில், இனப்பெருக்கம் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும், சனவரி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரையிலும் இருக்கும்.

இவற்றின் கர்ப்ப காலம் 257-270 நாட்கள் (சுமார் ஒன்பது மாதங்கள்) ஆகும். ஒரு தடவைக்கு ஒரு குட்டியைப் பெற்றெடுக்கும். குட்டி பிறக்கும் போது 5 கிலோ (11 பவுண்டு) எடையுள்ளதாக இருக்கும். குட்டி 23-29 வாரம் பால் குடிக்கும்.[6]

Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads