ஆயுதம் செய்வோம்

From Wikipedia, the free encyclopedia

ஆயுதம் செய்வோம்
Remove ads

ஆயுதம் செய்வோம் 2008[1] ஆம் ஆண்டு சுந்தர் சி, அஞ்சலி, விவேக், மணிவண்ணன், நெப்போலியன் மற்றும் விஜயகுமார் ஆகியோரது நடிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம்[2].

விரைவான உண்மைகள் ஆயுதம் செய்வோம், இயக்கம் ...
Remove ads

கதைச்சுருக்கம்

சைதை சத்யாவும் (சுந்தர் சி) காவலரான கந்தசாமியும் (விவேக்) நண்பர்கள். போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் சைதை சத்யாவையும் அதைக் கண்டிக்காத கந்தசாமியையும் நேர்மையான வழக்கறிஞர் உதயமூர்த்தி (விஜயகுமார்) நீதிமன்றத்தில் நிறுத்துகிறார். அவர்களை நீதிபதி (கு. ஞானசம்பந்தன்) மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு அனுப்ப உத்தரவிடுகிறார். அங்கு மீனாட்சியைச் (அஞ்சலி) சந்திக்கிறான் சத்யா. இருவரும் காதலிக்கிறார்கள். தண்டனை முடிந்து சென்னை திரும்பும் சத்யாவை, வழக்கறிஞர் உதயமூர்த்தியிடம் இருக்கும் ஆட்சியர் லீலாவதி (சுகன்யா) கொலை தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடிவரச் சொல்கிறார் முன்னாள் அமைச்சர் வி.பி.ஆர். (மணிவண்ணன்). அதை திருடச்செல்லும் சத்யா எதிர்பாராவிதமாக உதயமூர்த்தியின் மரணத்திற்குக் காரணமாகிறான். இறக்கும் முன் உதயமூர்த்தி "வாழ்க வளமுடன்" என்று சத்யாவை வாழ்த்திவிட்டு இறக்கிறார். அந்த வாழ்த்து சத்யாவைத் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. எனவே உதயமூர்த்தியின் மரணத்திற்கு நியாயம் செய்யும்விதமாக வி.பி.ஆர் மீதானக் குற்றத்தை நிரூபிக்க சத்யா சேகரித்த ஆதாரங்களை வி.பி.ஆர். அழித்துவிடுகிறார்.

இதனால் சத்யா மகாத்மா காந்தியின் அகிம்சைவழிப் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்து காந்தி சிலை அருகே அமர்ந்து போராட்டத்தைத் தொடங்குகிறான். உதயமூர்த்தி இறப்பைப் புலனாய்வு செய்யும் உதயமூர்த்தியின் சகோதரனும் காவல்துறை அதிகாரியான ஏழுமலை (நெப்போலியன்) சத்யாவை முதலில் சந்தேகித்தாலும், பிறகு அவன் நிரபராதி என்பதைக் கண்டறிகிறார். தொடர்ந்து வன்முறையின்றி அகிம்சையெனும் ஆயுதத்தின் துணையோடு போராடும் சத்யாவின் போராட்டத்தால் வி.பி.ஆர். தானே குற்றத்தைச் செய்ததாக ஒத்துக்கொண்டு சரணடைகிறார். சத்யா காந்தியின்[3] அகிம்சை வழியைப் பின்பற்றி நீதியை வெல்கிறான்.

Remove ads

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. பாடலாசிரியர்கள் பா. விஜய், சினேகன் மற்றும் உதயன்

மேலதிகத் தகவல்கள் வ.எண், பாடல் ...

விமர்சனம்

வெப்துனியா வலைதளத்தில் வந்த விமர்சனத்தில் "அரைகுறை உடை நடிகைகள், அடிதடி நாயகன், அரைவேக்காடு கதாபாத்திரங்கள். இத்தனைக்கும் நடுவில் காந்தியின் அகிம்சையை புகுத்தியிருக்கும் இயக்குனருக்கு போர்த்தலாம்தான் ஒரு கதராடை. ஆனால், புகுத்தியிருக்கும் விதத்தில் கந்தலாடையே எஞ்சுகிறது... காந்தியை கமர்ஷியலாக பயன்படுத்திய இயக்குனரின் முயற்சியில் புத்திசாலித்தனத்தைவிட பொத்தல்களே அதிகம் தென்படுகிறது!" என்று எழுதினர்.[4]

Remove ads

வருவாய்

ஆயுதம் செய்வோம் முதல் மூன்று நாளில் சென்னையில் மட்டும் 9 லட்ச ரூபாய் வசூலித்துள்ளது[5].

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads