சுகன்யா (நடிகை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுகன்யா (Sukanya பிறப்பு: 25 நவம்பர் 1972[1][2][3]) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்த முன்னணி பெரிய நடிகையாவார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
- சென்னையில் வாழ்ந்த ரமேஷ்–பாரதி இணையரின் மூத்த மகளாக 25 நவம்பர் 1969 அன்று இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு கீதா என்ற ஒரு தங்கை உள்ளார்.
திரையுலக அனுபவம்
- இவரது ஆர்த்தி தேவி என்ற இயற்பெயரை இவர் நடித்த முதல் திரைப்படமான புது நெல்லு புது நாத்து திரைப்படத்திலிருந்து இயக்குநர் பாரதிராஜாவால் சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரையுலகில் நுழைந்தார். சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
- இவர் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினாா். அதன் பிறகு சன் டி.வி யில் அந்த நிகழ்ச்சியை உமா தொகுத்து வழங்கினாா். இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்.
- இவர் புது நெல்லு புது நாத்து, சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
- பின்பு இவர் தமிழ் திரையுலகில் சத்யராஜ், சரத்குமார், ரகுமான் உடன் அதிகமான திரைப்படங்களில் இணைந்து ஜோடியாக நடித்துள்ளார்.
- மேலும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களுடனும் பெரும் வெற்றி திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
- இவர் மொத்தமாக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
- மேலும் சுகன்யா அவர்கள் மலையாள திரைப்படங்களில் அதிகமாக தொடர்ந்து நடித்ததாலும் அதே போல் கடவுள் வேடம் ஏற்று நடித்ததாலுமே இவருக்கு ஒரு காலகட்டத்தில் திரையுலகில் நடிப்பு குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
- பின்னர் திரைப்பட பாடலில் சுகன்யா வாயசைத்து பாடும் பொழுது பின்னணி பாடகி சுவர்ணலதா குரல் மிகவும் பொருந்தி போய் சுகன்யாவே பாடுவதை போல் அமைந்திருக்கும்.
Remove ads
திருமண வாழ்க்கை
- சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர இராஜகோபால் என்பவரை 2002 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.[5] பின்பு கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்படி இருவரும் மணமுறிவு பெற்றனர்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
Remove ads
தொலைக்காட்சித் தொடர்கள்
- சுவாமி ஐயப்பன் (ஏசியாநெட்)
- ஆனந்தம் (சன் தொலைக்காட்சி) - சாந்தி
- ஜன்னல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads