ஆய்-காவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆய்காவு (Hǎikǒu, ஹைகாவ், சீனம்: 海口; பின்யின்: Hǎikǒu), தென்கிழக்குச் சீனாவின் ஆய்னான் மாகாணத்தின் தலைநகரமும் மிகுந்த மக்கள் வாழும் நகரமும் ஆகும்.[3] ஆய்னான் மாகாணத்தின் வடக்குக் கடலோரத்தில் நாண்டு ஆற்றின் கழிமுகத்தில் ஆய்காவு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் வடபகுதியில் ஐதியான் தீவு உள்ளது.
ஆய்காவு மாவட்டநிலை நகரமாக நிர்வகிக்கப்படுகின்றது. 2,280 சதுர கிலோமீட்டர்கள் (880 sq mi) பரப்பில் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இந்த நான்கு நகரிய மாவட்டங்களில் 2,046,189 மக்கள் வாழ்கின்றனர்.[4]
ஆய்காவு ஓர் துறைமுக நகரம். இன்று பாதிக்கும் மேலான வணிகம் இதன் துறைகளின் மூலமே நடைபெறுகின்றது. அய்னான் பல்கலைக்கழகம் இந்நகரில் உள்ளது; அதன் முதன்மை வளாகம் அய்தியான் தீவில் அமைந்துள்ளது.
Remove ads
காட்சிக்கூடம்
- பின் ஆய் சாலையிலிருந்து தென்புறக் காட்சி
- ஆய்தியான் தீவை இணைக்க ஆய்தியான் ஆற்றின் மேலாக கட்டப்பட்டுள்ள ஆய்காவு நூற்றாண்டுப் பாலம்
- ஆய்னான் மாகாண நூலகம்
- ஆய்னான் மாகாண அருங்காட்சியகம்
- எவர்கிரீன் பூங்காவிலிருந்து கிழக்குப்புற காட்சி
- சுங்கவரிக் கட்டிடம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads