ஆரியவர்த்தம்

From Wikipedia, the free encyclopedia

ஆரியவர்த்தம்
Remove ads

ஆரியவர்த்தம் (ஒலிப்பு) (Āryāvarta) என்பது சமஸ்கிருத மொழி இலக்கியங்களின் படி, இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தோ ஆரிய மக்கள் வாழ்ந்த விந்திய மலைத்தொடரின் வடக்கு பகுதிகளான, பண்டைய காந்தாரம், பாக்லீகம், மத்திர நாடுகளும், தற்கால சிந்து மாகாணம், பஞ்சாப் பகுதிகள், குஜராத், இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பிகார், மேற்கு வங்காளம் வங்காளதேசம் மற்றும் தெற்கு நேபாளம் உள்ளடக்கிய நிலப்பகுதிகளாகும். பரசுராமரால், காசியப்ப முனிவருக்கு பூமியின் நடுப்பகுதி " ஆரியவர்த்தம்" என்ற புண்ணிய பூமியை தானமாக வழங்கப்பட்டது. ஆதாரம் : ஸ்ரீமத்பாகவதம் (9:16:22)

Thumb
வேத கால ஆரியவர்த்தப் பகுதிகள் (வெளிர் மஞ்சள் நிறம்)
Remove ads

இலக்கிய ஆதாரங்கள்

மனுதரும சாத்திரத்தின் படி, வடக்கில் இமயமலை முதல் தெற்கில் விந்திய மலைத்தொடர் வரையிலும்; கிழக்கில் கிழக்கு கடல் (வங்காள விரிகுடா) முதல் மேற்கில் அரபுக் கடல் வரையிலான பகுதிகளை ஆரியவர்த்தம் எனக் குறிப்பிடுகிறது. (2.22) [1][2] ஸ்ரீமத் பாகவதம் ( 9:16:22)

ஆரியவர்த்தப் பகுதியை கல்ப வேதாங்க சூத்திரங்களிலும், வசிட்டரின் தர்ம சூத்திரங்களிலும், (Kalpa (Vedanga)#Dharma Sutras|Vasistha Dharma Sutra) (I.8-9 and 12-13) இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கில் தார் பாலவனத்தில் மறைந்த சரஸ்வதி ஆறு முதல் வடக்கில் இமயமலை அடிவாரம் வரையிலும்; தெற்கில் விந்திய மலைத் தொடர்கள் வரையிலும் பரவியிருந்த்தாக கூறுகிறது. [3]

போதயான தர்ம சூத்திரங்களில் ( 1.1.2.10) மேற்கில் தோவாப் முதல் கிழக்கில் ஆதர்சனம் வரையிலும்; வடக்கில் இமயமலையின் தென்பகுதி முதல் தெற்கில் விந்திய மலைத்தொடர் வரையில் ஆரியவர்த்தப் பகுதி பரவியிருந்ததாக கூறுகிறது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads