ஆர்சனிக் ஐந்தாக்சைடு

From Wikipedia, the free encyclopedia

ஆர்சனிக் ஐந்தாக்சைடு
Remove ads

ஆர்சனிக் ஐந்தாக்சைடு (Arsenic pentoxide) என்பது As2O5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். இது ஆர்சனிக்(V) ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்சனிக் மற்றும் ஆக்சைடு அயனிகளால் ஆன இச்சேர்மத்தில் ஆர்சனிக் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. ஆர்சனிக் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் ஆர்சனிக் மூவாக்சைடு அல்லது ஆர்சனிக்(III) ஆக்சைடு சேர்மமே மிகப்பரவலாகக் காணப்படுகிறது. எலிகளில் ஆர்சனிக் ஐந்தாக்சைடின் உயிர்கொல்லும் அளவு ( LD50 ) 8 மி.கி/கி.கி ஆகும்.[1] இச்சேர்மம் தண்ணீருடன் தொடர்பு கொண்டால் ஆர்சனிக் அமிலமாக மாறுகிறது. இவ்வமிலம் உலோகங்களை அரிக்கும் தன்மை கொண்டது ஆகும்.

Thumb
ஆர்சனிக் ஐந்தாக்சைடின் முப்பரிமாணப் படம்
Remove ads

பண்புகள்

வெண்மை நிறத்துடன் நெடியற்று ஆர்சனிக் ஐந்தாக்சைடு காணப்படுகிறது. எளிமையாகத் தண்ணீரில் கரைந்து ஆர்சனிக் அமிலத்தை உருவாக்குகிறது.[1] அனைத்து ஆர்சனிக் சேர்மங்கள் போலவே ஆர்சனிக் ஐந்தாக்சைடும் அதிக நச்சுத்தன்மையுடன் காணப்படுகிறது[1][2][3]. வலிமையான ஆக்சிசனேற்றியான இச்சேர்மம் ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து குளோரின் வாயுவைக் கொடுக்கிறது. 300° செ வெப்பநிலைக்கு ஆர்சனிக் ஐந்தாக்சைடை சூடுபடுத்தினால் இது ஆர்சனிக் மூவாக்சைடு மற்றும் ஆக்சிசனாக உடைகிறது.[4]

இது காரங்களுடன் வினைபுரிந்து ஆர்சனேட்டுகளை உருவாக்குகிறது. இவ்வினைக்குத் தேவையான ஆற்றல் சூடுபடுத்தலின் போது எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Remove ads

தயாரிப்பு

ஆர்சனிக் ஐந்தாக்சைடை, ஆர்சனிக்கை எரிய வைத்து தயாரிக்க இயலாது. அவ்வாறு எரியும் பொழுது ஆர்சனிக் மூவாக்சைடு சேர்மமே உருவாகிறது. எனவே [[ஆர்செனிக் அமிலம்|ஆர்செனிக் அமிலத்தை நீர் நீக்கம் செய்து இதைத் தயாரிக்கலாம். நீர் நீக்கத்தை பாசுபரசு ஐந்தாக்சைடு சேர்மத்தைக் கொண்டு நிறைவேற்றலாம்.

ஆர்சனிக் ஐந்தாக்சைடு வெண் துகளாக விடுவிக்கப்படுகிறது.[5]

Remove ads

பயன்கள்

ஆர்சனிக் ஐந்தாக்சைடு தீங்குயிர்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது கண்ணாடித் தொழில் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.[6]

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads