ஆர்த்தி (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

ஆர்த்தி (நடிகை)
Remove ads

ஆர்த்தி கணேஷ்கர், ஒரு தென்னிந்தியத் திரைப்பட தொலைக்காட்சி நடிகை.[1] இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவையூட்டும் வேடத்தில் நடித்துள்ளார், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அசத்தப் போவது யாரு? நிகழ்ச்சியின் நடுவராகவும் உள்ளார்.[2]. கணேஷ்கர் என்ற நகைச்சுவை நடிகரைத் திருமணம் செய்துகொண்டார்.[3] இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை வென்றார். இந்திய ஆட்சிப் பணியாளராக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

விரைவான உண்மைகள் ஆர்த்தி, பணி ...

1987ம் ஆண்டு வெளிவந்த வண்ணக் கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்பட சுமார் 65 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தைப்பருவத்தில் சககுழந்தை நட்சத்திரமும் தற்போது இவருடைய கணவருமான கணேஷ்கரின் சகோதரியாக, என் தங்கை கல்யாணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதினைப் பெற்றுள்ளார்.

Remove ads

திரைப்படங்கள்

வருடம்திரைப்படம்கதாபாத்திரம்குறிப்புகள்
1987வண்ணக் கனவுகள்குழந்தைப்பருவ நடிகர்
1988என் தங்கை கல்யாணிகுழந்தைப்பருவ நடிகர்
1989தென்றல் சுடும்குழந்தைப்பருவ நடிகர்
1990சத்ரியன்குழந்தைப்பருவ நடிகர்
1990காவலுக்குக் கெட்டிக்காரன்குழந்தைப்பருவ நடிகர்
2004அருள்நீலவேணி
2004கிரிவடிவேலுவின் உதவியாளர்
2005காற்றுள்ளவரைவடிவேலுவின் மனைவி
2005குண்டக்க மண்டக்க
2005மாயாவிஇன்ஸ்பெக்டர் ஈஸ்வரி
2006நெஞ்சிருக்கும் வரை
2006திருப்பதி
2006குஸ்தி
2007மலைக்கோட்டை
2007தாமிரபரணி
2008காதல் வானிலே
2008குருவி
2009மலை மலைமேலாளர் அருந்ததி
2009அடடா என்ன அழகு
2009வில்லு
2009தோரணை
2009ஐந்தாம் படைடையானா
2009புதிய பயணம்
2009படிக்காதவன்திருக்கானி
2009சூரியன் சட்ட கல்லூரி
2009குரு என் ஆளு
2010குட்டி
2010கச்சேரி ஆரம்பம்
2010தம்பிக்கு இந்த ஊரு
2010குரு சிஷ்யன்மோகனாம்பாள்
2010வீரசேகரன்
2010தைரியம்
2010பலே பாண்டியா
2010உத்தம புத்திரன்
2011தம்பிக்கோட்டை
2011கந்தா
2011காதலுக்காக பொருத்தம்
2011மதுவும் மைதிலியும்
2011ஒரு முத்தம் ஒரு யுத்தம்
2011அழகன் அழகி
2011சவுரியம் (தெலுங்கு)
2011விஷ்ணுவர்தன் (கன்னடம்)
2012கழுகு
2012தடையறத் தாக்க
2013எதிர்நீச்சல்
2013நான் ராஜாவாகப் போகிறேன்கராத்தே துர்கா
2013சொன்னா புரியாது
2013யா யா
2013வணக்கம் சென்னை
2014இங்க என்ன சொல்லுது
2014இது கதிர்வேலன் காதல்
2014நான் சிகப்பு மனிதன்
2014வெற்றிச் செல்வன்
2014அரண்மனை
2014கயல்
2015கில்லாடி
2015யட்சன்

Remove ads

தொலைக்காட்சியில்

விருதுகள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads