தாமிரபரணி (திரைப்படம்)
ஹரி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாமிரபரணி (Thaamirabharani) 2007ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத் திரைப்படத்தினை ஹரி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஷால், பானு, பிரபு, நதியா மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 27ம் திகதி வெளியிடப்பட்டது.
Remove ads
கதை
கோபமும் வீரமும் கொண்ட இளைஞனாக வரும் விஷாலை சுற்றி கதை தொடங்குகின்றது. தனது மாமா பிரபுவின் மீது அளவுகடந்த பாசமும் மரியாதையும உள்ள விஷால் மாமாவை எதிர்த்து யாரேனும் பேசினால் அவர்களிடம் சண்டைக்கு போகின்ற குணமுடையவர். அதே ஊரின் பெரிய மனிதரான விஜயகுமாரின் மகள் நதியா, நதியாவின் அண்ணன் நாசர். இவர்கள் குடும்பத்திற்கும் பிரபுவின் குடும்பத்திற்கும் ஆகாத நிலையில் நதியாவையும் நாசரையும் மாமா பிரபுவிற்காக பலமுறை எதிர்க்கிறார் விஷால்.
இந்நிலையில் நதியாவின் மகளான பானு விஷாலைச் காதலிப்பதாக கூறுகின்றார். இதனை நம்பாத விஷால் எங்கே பானு தன்னை வம்பில் சிக்கவைத்துவிடுவாரோ என்று நினைத்து அவரை விட்டு ஒதுங்குகின்றார். ஒரு கட்டத்தில் பானு விஷாலுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துவிட அதனை தொடர்ந்து இரு குடும்பத்திற்கும் பிரச்சனை வலுக்கின்றது. இந்நிலையில் பானு தன் மாமா பிரபுவின் மகள் என்பதும் தான் விரோதியாக நினைக்கும் நதியா மாமாவின் மனைவி என்பதும் விஷாலிற்குத் தெரியவருகிறது. பிரபு தன் மனைவி நதியாவைப் பிரிந்ததே தனக்காகவும் தன் தாய் ரோகினிக்காகவும் தான் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட விஷால் தன்னால் களங்கப்பட்ட பானுவை எப்படியாவது திருமணம் செய்ய முடிவெடுக்கின்றார். இவர்கள் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்ததா? இரு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதி கதையாகும்.
Remove ads
நடிகர்கள்
பாடல்கள்
- கருப்பான கையாலே - ரஞ்சித், ரோசிணி, கோரஸ்
- கட்டப்பொம்மன் ஊரெனக்கு - விஜய் யேசுதாஸ், கோரஸ்
- வார்த்தை ஒன்னு - கே கே (கிருஷ்ணகுமார் குன்னத்)
- தாலியே தேவையில்லை - ஹரிஹரன், பவதாரினி
- திருச்செந்தூரு முருகா - நவின், கோரஸ்
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியைக் கதைக் களமாகத் தேர்ந்தெடுத்து மண்வாசம் மாறாமல் கதை சொல்வதில் ஜெயித்திருக்கிறார் டைரக்டர் ஹரி... சென்டிமென்ட்டில் புகுந்து புறப்பட்டவர்கள், கேரக்டர்களை குறைத்து, அவர்களின் வாயையும் கொஞ்சம் கட்டியிருந்தால், தாமிரபரணி இன்னும் ருசித்திருக்கும்." என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads