ஆர். கே. செல்வமணி
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரா. கா. செல்வமணி (R. K. Selvamani) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகும்.
ஆரம்பகால வாழ்க்கை
செல்வமணி செங்கல்பட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1965 அக்டோபர் 21 அன்று கல்யாணசுந்தரம், செண்பகம் இணையரின் மகனாகப் பிறந்தார்.
தொழில் வாழ்க்கை
இவர் தனது திரைப்படத்துறையை இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனின் உதவியாளராக ஆரம்பித்தார்,[1] பின்னர் 1980 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த்தைக் கதாநாயகனாக வைத்து புலன் விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார்.[2] இந்தப் படம் சில அரசியல் பெரியவர்களின் தூண்டுதலின் பேரில் பல பெண்களைக் கடத்தி கொன்ற ஆட்டோ சங்கரின் நிஜ வாழ்க்கை வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டில் கேப்டன் பிரபாகரன் என்ற படம் வெளியானது. இப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு மரியாதை செய்யும் விதமாக இருந்தது, அதேநேரம் கதைக்களம் வனக் கொள்ளைக்காரன் வீரப்பனை அடிப்படையாகக் கொண்டது.[3][4] அதைத் தொடர்ந்து செம்பருத்தி (1992), பொன் விலங்கு (1993), கண்மணி (1994), ராஜ முத்திரை (1995) போன்ற பல படங்களை எழுதியும் இயக்கியுமுள்ளார்.
இவர் 1994 ஆம் ஆண்டில், அதிரடிப்படை என்ற திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கினார். இந்தப் படத்தில் ரகுமான், ரோஜா, மன்சூர் அலிகான், விஜயகுமார், லட்சுமி ஆகியோர் நடித்தனர். ¨
இவரின் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான அரசியல் என்ற திரைப்படத்திற்காக 'சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது' வென்றது. இந்தத் திரைப்படத்தில் மம்மூட்டி, சில்பா சிரோத்கர், ரோஜா, மன்சூர் அலி கான், ஆனந்த்ராஜ், சரண் ராஜ், ஜெய்கணேஷ் போன்றோர் நடித்திருந்தனர்.
இவர் அக்டோபர் 2008-இல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய பேச்சு சர்ச்சைக்குரியதாகத் தமிழ்நாட்டில் அமைந்தது. ஆர்.கே. செல்வமணி தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய செயலாளராக உள்ளார்.[5]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
செல்வமணி 2002 ஆகத்து 10 அன்று நடிகை ரோஜாவை திருமணம் செய்துகொண்டார். இந்த இணையருக்கு மகளும், மகனும் உள்ளனர்.
இயக்குநராக
எழுத்தாளர், தயாரிப்பாளர்
தொலைக்காட்சிகளில்
- நடிகராக
- வைகை எக்ஸ்பிரஸ் (2017)
- நிறங்கள் மூன்று (2024)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads