மம்மூட்டி
இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகம்மது குட்டி பாணப்பரம்பில் இசுமாயில் (Muhammad Kutty Panaparambil Ismail செப்டம்பர் 7, 1951) மம்மூட்டி என்று பரவலாக அறியப்படும் இவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். முதன்மையாக மலையாள படங்களில் பணிபுரிகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஐந்து தசாப்த கால திரை வாழ்க்கையில், 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், ஏழு கேரள மாநிலத் திரைப்பட விருதுகள் மற்றும் பதின்மூன்று பிலிம்பேர் விருதுகள் தென்னக விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசு அவருக்கு 1998 இல் பத்மசிறீ விருது வழங்கியது.
1971 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான அனுபவங்கள் பாலிச்சகள் மூலம் மம்மூட்டி நடிகராக அறிமுகமானார். ஐ. வி. சசியின் வெளிவராத திரைப்படமான தேவலோகம் (1979) இல் முதன்முறையாக முன்னணிக் கதாப்ப்பாத்திரத்தில் நடித்தார். 1981 ஆம் ஆண்டு அகிம்சா படத்தில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார் .1983 ஆம் ஆண்டு வெளியான சந்தியாக்கு விரிஞ்ச பூவு மற்றும் ஆ ராத்திரி ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றன. சில தோல்விகளைத் தொடர்ந்து, 1987 ஆம் ஆண்டு வெளியான நியூ டெல்லி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
2000களில் இவரது திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வெளிவந்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் (2000) வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வழங்கப்பட்டது, மேலும் காசா (2004) மற்றும் பலேரி மாணிக்யம் (2009) ஆகிய படங்களுக்கு கேரள மாநிலத் திரைப்பட விருதுகளை வென்றார். பிராஞ்சியேட்டன் & தி செயிண்ட் (2010), வர்ஷம் (2014), பதேமரி மற்றும் உண்டா (2019) ஆகியவற்றிற்காக விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றார், மேலும் முதல் மூன்று திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை

மம்மூட்டி 1951 செப்டம்பர் 7இல் சந்திரூரில் பிறந்தார்.[1] இந்தியாவின்,கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகே உள்ள செம்பு கிராமத்தில் நடுத்தர வர்க்க முஸ்லீம் குடும்பத்தில் வளர்ந்தார். இவரது தந்தை இஸ்மாயில், மொத்தமாக ஆடை மற்றும் அரிசி வியாபாரம் செய்து, நெல் சாகுபடியில் ஈடுபட்டு வந்தார். இவரது தாயார் பாத்திமா ஓர் இல்லத்தரசி. இவர் மூத்த மகனாவார். இவருக்கு இப்ராகிம்குட்டி மற்றும் ஜக்கரியா என்ற இரண்டு இளைய சகோதரர்களும், அமீனா, சவுதா மற்றும் சபினா என்ற மூன்று தங்கைகளும் உள்ளனர்.
கோட்டயம் குலசேகரமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார்.[2] 1960களில், எர்ணாகுளத்திற்கு குடிபெயர்ந்தனர், அங்கு எர்ணாகுளம் அரசுப் பள்ளியில் பயின்றார். தேவாரத்தில் உள்ள சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை படித்தார்.[3] எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் பெற்றார்.[4] மஞ்சேரியில் இரண்டு ஆண்டுகள் வழக்குரைஞர் தொழில் செய்தார்.[5][6]
Remove ads
தொழில் வாழ்க்கை
1971-1980
1971 ஆம் ஆண்டு கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய அனுபவங்கள் பாலிச்சகள் படத்தில் அறிமுகமானார். கே. நாராயணன் இயக்கிய 1973இல் வெளியான மலையாளத் திரைப்படமான காலச்சக்கரம் இவரது இரண்டாவது படமாகும்.[7][8] 1975 இல் சபர்மதி என்ற நாடக நாடகத்தில் நடித்தார்.[9][10] 1979 ஆம் ஆண்டில், எம். டி. வாசுதேவன் நாயர் இயக்கிய தேவலோகம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால், இந்தப் படம் முடிவடையவில்லை.[11] 1980 ஆம் ஆண்டு கே. ஜி. ஜார்ஜ் எழுதி இயக்கிய மேளா திரைப்படம் வெளியான திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[12]
மற்ற மொழித் திரைப்படங்கள்
கே.பாலசந்தரின் ( அழகன் ), மணிரத்னத்தின் ( தளபதி ), ஃபாசிலின் ( கிளிப்பேச்சு கேக்கவா ), என். லிங்குசாமியின் ( ஆனந்தம் ), ஆர்.கே.செல்வமணியின் ( மக்கள் ஆட்சி ) ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மருமலர்ச்சி பாரதியின் ( மறுமலர்ச்சி ) மற்றும் எதிரும் புதிரும் ராஜீவ் மேனன் ( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ) (2000). கே. விஸ்வநாத்தின் தெலுங்குத் திரைப்படமான சுவாதி கிரணத்தில் (1992) அனந்த சர்மாவாக நடித்தார்.[13]
Remove ads
இசைத் தொகுப்பு
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads