ஆர். கே. லட்சுமண்

From Wikipedia, the free encyclopedia

ஆர். கே. லட்சுமண்
Remove ads

இராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் (Rasipuram Krishnaswamy Laxman[1] (24 அக்டோபர் 1921 – 26 சனவரி 2015) பிரபல கேலிச் சித்திரங்கள் வரைந்துவந்த ஓர் ஓவியர் ஆவார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் இளைய சகோதரரான இவர் இந்தியாவில் மைசூரில் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார். கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் 'திருவாளர் பொதுஜனம்' (Common Man) என்கிற கதாபாத்திரத்தை 1951 முதல் அறுபதாண்டு காலமாக வரைந்து வந்தார்.[2][3]

விரைவான உண்மைகள் ஆர். கே. லட்சுமண்R.K.Laxman, பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார். [4]

ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை குமாரி கமலாவை (பேபி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், மும்பை மற்றும் புனே ஆகிய ஊர்களில் வசித்தார்.

Remove ads

தொழில்முறை வாழ்க்கை

Thumb
'திருவாளர் பொதுஜனம்', ஆர். கே. லட்சுமண், சிபயாசிஸ் இன்ஸ்டிடியுட், புனே, இந்தியா
Thumb
A tribute to the late R. K. Laxman by cartoonist Shekhar Gurera

இவர் முதலில் கன்னட இதழான குறவஞ்சியில் கேலி சித்திரம் வரைந்தார்[5]. சென்னையின் செமினி இசுடியோவில் (Gemini Studio) ஆறு மாதம் பணிபுரிந்தார். பின் மும்பைக்கு சென்று பிளிட்சு இதழில் பணிபுரிந்தார். பிளிட்சு இதழின் முதலாளி கரஞ்சியா முன்பு பணியில் சேர்வதற்கு முன்பு (Karanjia) சில கேலி சித்திரங்கள் வரைந்தார்[6]. அதில் சிலவற்றை பிளிட்சு இதழில் பயன்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிரி பிரசு சர்னலில் (Free Press Journal) சேர்ந்தார். அங்கு பணியாற்றிய போது அதன் சார்பு இதழான பாரத் சோதி, வார இதழ் இசுடேட் பீப்பிள் சப்பிளிமெண்ட்டிலும்(State's People Supplement.) கேலி சித்திரங்கள் வரைந்தார். அங்கு முதலாளியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிலிருந்து வெளியேறி 1947இல் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் சேர்ந்தார். 1952இல் காமன்மேன் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் முதற்பக்கத்தில் இடம்பிடித்தது.[7][8] லட்சுமண் பிரி பிரசு சர்னலில் பணியாற்றிய போது அவருடன் சிவ சேனாவின் நிறுவனர் பால் தாக்கரேவும் கேலி சித்தரக்காரராக பணியாற்றினார்.[8]

'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயணின் 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (mascot) இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'திருவாளர் பொதுஜனம்' சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .[2]

Remove ads

சர்ச்சை

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் குறித்து டைம்சு ஆப் இந்தியாவில் இவர் வரைந்த கேலி சித்திரம் என்சிஆர்டி-யின் 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.[9] இவரின் இக்கேலிச்சித்திரம் இந்தித் திணிப்பு போராட்டத்தை கொச்சை படுத்துவதாக உள்ளதாகவும் இதை பாட திட்டத்தில் இருந்து நீக்கவேண்டுமென்றும் தமிழக தலைவர்கள் கோரியுள்ளனர்.[10][11][12][13] கேலிச்சித்திரமானது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் ஆங்கிலம் தெரியாத அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று கூறுகிறது.

மறைவு

2015 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இருபத்தாறாம் நாளில் புனே நகரில் காலமானார்.[14].[15]

விருதுகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads