குமாரி கமலா

From Wikipedia, the free encyclopedia

குமாரி கமலா
Remove ads

குமாரி கமலா (பிறப்பு: 16 சூன் 1934) பழம்பெரும் நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், பாடகியும் ஆவார். 1950களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய இவர் 80 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலா பரத நாட்டியத்தில் இணையற்றத் தாரகைகளான தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி ஆகியோர் வரிசையில் எண்ணத்தக்கவர் ஆவார்.

விரைவான உண்மைகள் குமாரி கமலா, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் ராமமூர்த்தி ஐயர், ராஜம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் குமாரி கமலா. இருவரும் கலையார்வலர்கள். இவருக்கு 3 வயதானபோது குடும்பம் பம்பாய்க்கு இடம் பெயர்ந்தது. அந்த வயதில் கமலா கதக் நாட்டியம் பயின்றார். அங்கு மூன்றரை வயதில் பம்பாய் ஆஸ்திக சமாஜத்தில் நடன மேதை ருக்மிணி முன்னிலையில் ஆடி அவர் கையால் மாலையிடப்பட்டு வாழ்த்து பெற்றார். ஐதராபாத்தில் கவியரசி சரோஜினி நாயுடு முன்னிலையில் நடனமாடி வாழ்த்து பெற்றார். தந்தை ஈரானிலும் பின்னர் பம்பாயிலும் பணி புரிந்தவர். கமலாவிற்கு ராதா, வசந்தி என இரு உடன்பிறந்தவர்கள் உண்டு. இரண்டாம் உலகப்போரால் கமலாவின் குடும்பம் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு இடம்பெயர்ந்தது. இது அவர் வாழ்வின் முக்கிய திருப்பம். கமலா பரதம் பயின்றார். அவரது பரதத்துக்கு காட்டுமன்னார் கோயில் முத்துக்குமரப் பிள்ளை அடித்தளமிட்டார். அதை வளர்த்து விட்டவர் வழுவூர் பி. இராமையா பிள்ளை. ராமையா பிள்ளையிடம் 25 ஆண்டு சிட்சை.

பம்பாயிலிருந்த ரஞ்சித் மூவிடோன் கம்பெனியில் மாதச் சம்பளத்தில் இவர் குழந்தை நடிகையாகச் சேர்ந்தார். ராம ராஜ்யா, கிஸ்மத், விஷ்கன்யா, ஷாஜி, கந்தன், தத்புரி போன்ற இந்திப் படங்களில் நடித்தார். மியூசிக் அகடாமியிலிருந்து, எலிசபத் அரசியின் முடிசூட்டு விழா வரை கமலாவின் நாட்டியம் நடக்காத இடமேயில்லை என்றாயிற்று. அவர் புகழ் எங்கும் பரவியது. நாம் இருவர் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவரின் நடனம் இடம்பெற்றது.

Remove ads

திரைப்படங்களில் நடிப்பு

மும்பையில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்ததும், காட்டுமன்னார்கோவில் முத்துக்குமாரப் பிள்ளை என்பவரிடம் முறையாக பரதம் கற்றுக் கொண்டு மாயவரத்திலேயே அரங்கேற்றமும் செய்தார். பின்னர் சென்னைக்குக் குடி பெயர்ந்து வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்று பல நிகழ்ச்சிகள் செய்தார். ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் 1944 இல் வெளிவந்த ஜகதலப் பிரதாபன் திரைப்படத்தில் பாம்பு நடனம் ஆடிப் புகழ் பெற்றார். அதன் பின்னர் இவருக்குப் பல திரைப்படங்களில் நடனம் ஆட வாய்ப்புக் கிடைத்தது. நாம் இருவர் (1947) திரைப்படத்தில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை இரட்டை வேடத்தில் நடித்துப் பாடினார். ஏவிஎம் இன் பராசக்தி திரைப்படத்தில் ஓ... ரசிக்கும் சீமானே... என்ற பாடல், கொஞ்சும் சலங்கை படத்தில் இவரும் நடிகை குசலகுமாரியும் இணைந்து ஆடிய போட்டி நடனம் ஆகியவை இவருக்குப் புகழ் சேர்த்தன.

பாவை விளக்கு (1960) திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தணிகாசலம் என்ற எழுத்தாளனாக நான்கு கதாநாயகிகளுடன் நடித்து வெளிவந்தது. இப்படத்தில் முதல் கதாநாயகியாக குமாரி கமலா செங்கமலம் என்ற பாத்திரத்தில் குமாரி கமலா நடித்திருந்தார். இப்படத்தில் வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் என்று கதாநாயகன் எழுதிப் பாடும் பாட்டிற்கு குமாரி கமலா நாட்டியமாடி இருந்தார்.

ஸ்ரீதேவி நடித்த தெய்வத் திருமணம், ஜெயசித்ரா நடித்த வருவான் வடிவேலன் போன்ற சில படங்களுக்கு நடன ஆசிரியையாகப் பணியாற்றியுள்ளார்.

Remove ads

குடும்பம்

பிரபல ஓவியர் ஆர். கே. லட்சுமணனை திருமணம் புரிந்தார் கமலா. அவருடன் 1960 இல் மணமுறிப்பு செய்த பின்னர்[1] 1964-ல் இராணுவ வீரர் மேஜர் லெட்சுமிநாராயணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலானார். 1980-ல் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் குடியேறி அங்கே "ஸ்ரீபரதகலாலயா' என்கிற நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து ஏராளமானவர்களுக்கு பரதக் கலையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். 1983-ல் கணவர் இறந்த பிறகு தன் மகனோடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

விருதுகள்

இவர் பெற்றுள்ள விருதுகள்[2]:

  • 1967 - கலைமாமணி விருது
  • 1968 - சங்கீத நாடக அகாதமி விருது[3]
  • 1970 - இந்திய அரசு இவரது கலைத் திறமையை பாராட்டும் விதமாக இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி பாராட்டியது.[4]
  • 1975 - கால்கேட் பல்கலைக்கழகத்தின் பேராசியர் பதவி (Branta Professorship from Colgate University)
  • 1989 - இ. கிருஷ்ண அய்யர் பதக்கம் (சுருதி அமைப்பு)
  • 1993 - சங்கீத ரத்னகாரா (கிளீவ்லேண்டு தியாகராஜ ஆராதனை)
  • 2002 - சென்னை மியூசிக் அகாதமியின் பவள விழா விருது (Platinum Jubilee award-)
  • 2010 - தேசிய பாரம்பரிய ஆய்வுதவித் தொகை (National Heritage Fellowship)
Remove ads

நடித்த திரைப்படங்கள் சில

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads