ஆலங்காயம் பேரூராட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆலங்காயம் பேரூராட்சி (ALANGYAM TOWN PANCHAYAT ) தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் அமைந்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது வாணியம்பாடியிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
8 ச.கி.மீ. பரப்பு கொண்ட ஆலங்காயம் பேரூராட்சி 15 வார்டுகளையும், 105 தெருக்களையும் கொண்டது. ஆலங்காயம் பேரூராட்சி 4601 வீடுகளும், 17,400 மக்கள்தொகையும் கொண்டது.[1]
சிறப்புகள்
உலகின் இரண்டாவதும், ஆசியா கண்டத்திலேயே மிகவும் பெரியதுமான வைணு பாப்பு வானாய்வகம், ஆலங்காயத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆலங்காயம் பகுதியைச் சுற்றி சவ்வாது மலை அமைந்துள்ளதால் இப்பகுதியில் மிதமான வெப்பநிலை ஆண்டு முழுவதும் நிலவுகிறது.
ஆலங்காயத்திலிருந்து தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களுக்கு, குறிப்பாகச் சென்னை சேலம் ,திருப்பத்தூா், வேலூா் போன்ற நகரங்களுக்கு நேரடியாக பேருந்து வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது..
கல்க்கோயில், பெத்தூா், நரசிங்கபுரம், படகுப்பம், புலவா்பள்ளி, கல்லரப்பட்டி, பங்கூர், இராசாபாளையம், கொங்கியுா் போன்ற கிராம பகுதிகள் ஆலங்காயத்தை சுற்றி உள்ளன
Remove ads
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads