வாணியம்பாடி

From Wikipedia, the free encyclopedia

வாணியம்பாடிmap
Remove ads

வாணியம்பாடி (Vaniambadi) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, வாணியம்பாடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது வேலூர்க்கு தென்கிழக்கே 69 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலும் திருப்பத்தூரில் இருந்து 22 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊர் பாலாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். பிரியாணி இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ஆண்கள் இஸ்லாமிய கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும் பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான ஏலகிரி மலை வாணியம்பாடிக்கு அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள்
Thumb
ஏலகிரி மலை
Thumb
பிரியாணி
Remove ads

வரலாறு

வாணியம்பாடியின் பழைய பெயர் வணிகன்பாடி (வணிகம்+பாடி) ஆகும். வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை ஒரு இடத்தில் வைத்து, பாதுகாப்புக்காக வீரர்கள் அடங்கிய 'பாடி'யை வைத்து பல ஊர்களுக்கு சென்று வணிகம் செய்தனர் அதனால் வணிகன்பாடி என்று பெயர்பெற்ற இந்த ஊர் காலப்போக்கில் திரிந்து வாணியம்பாடி என்று வழங்கப்ட்டது என்று சொல்லப்படுகிறது.[3]

பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் காலத்தில் இவ்வூர் நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கபட்டது. குலோத்துங்க சோழன் காலத்தில் சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துப் பெரும்பாணப்பாடி ஆன வணிகன்பாடி என்று இந்த ஊர் குறிக்கபட்டுள்ளது. வணிகன் பாடியை பல்லவர்களின் கீழும், சோழர்கள் கீழும் குறிநில மன்னர்களான பாணர் ஆண்டதை கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.[3]

கி.பி. 1874, 1903 ஆண்டுகளில் பெருமழையால் பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் வாணியம்பாடியில் வெள்ளம் புகுந்தது. இதனால் பலர் வீடுகள் இழந்தனர். பலர் உயிர்களை இழந்தனர். நூற்றுகணக்கான ஆடு, மாடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன.[3] வாணியம்பாடி நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Remove ads

புவியியல்

12.68°வடக்கு 78.62°கிழக்கு [4] என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது [5]

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 20,559 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 95,061 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.1% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் 12013 எண்ணிக்கை ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,405 மற்றும் 87 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 41.75% , இசுலாமியர்கள் 55.74%, கிறித்தவர்கள் 1.99% , தமிழ்ச் சமணர்கள் 0.02%, மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads