ஆலுவா

From Wikipedia, the free encyclopedia

ஆலுவாmap
Remove ads

ஆலுவா (Aluva) என்னும் ஊர் முன்னதாக ஆலுவை என்றும் அறியப்பட்டது. இவ்வூர் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி விமான நிலையம் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் அரசரின் கோட்டை இங்குள்ளது. இங்கு பெரியாறு என்ற ஆறு பாய்கிறது.[1] தொடங்கப்படவிருக்கும் கொச்சி மெட்ரோ திட்டத்தின் முதன் ரயில் நிலையம், ஆலுவையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலுவாயில் என்ற பெயர் ஆலமரத்தினால் உண்டானது என்று கருதுகின்றனர். இதற்கு சான்றாக, இங்குள்ள சிவன் கோயிலின் மேற்கில் ஆலமரம் உள்ளது. ஆலுவா-நடுங்ஙல்லூர்-திருவால்லூர் ஆகிய மூன்று ஊர்களையும், பாம்பின் வாய், நடுப்பகுதி, வால் என கூறுவதாக புராணக் கதை கூறப்படுகிறது. ஆலுவையிலும், நடுங்ஙல்லூரிலும், திருவால்லூரிலும் உள்ள கோயில்கள் தொடர்பாகவே இக்கதை சொல்லப்படுகிறது.

விரைவான உண்மைகள்

ஆலுவா, திருவாங்கூர் அரச குடும்பத்தின் கோடைகால வசிப்பிடமாக விளங்கியது. ஆண்டுதோறும் பெரியாறு ஆற்றின் மணற்பரப்பில் கொண்டாடப்படும் சிவராத்திரி விழாவிற்கும் இவ்வூர் நன்கு அறியப்படுகிறது.[2] இந்திய சமூக சீர்திருத்தவாதியான சிறீ நாராயண குருவால் 1913-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆலுவாவில் உள்ள அத்வைத ஆசிரமம், இப்பகுதியின் கலாச்சார அம்சத்தை மேலும் மேம்படுத்துகிறது.[3]

Remove ads

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads