ஆல்பர்ட்டா
கனடிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆல்பர்ட்டா (Alberta) கனடாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் தலைநகரம் எட்மன்டன், மிகப்பெரிய நகரம் கால்கரி. மக்கள் எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் சுமார் 4.26 மில்லியன்.
இந்த மாகாணத்தின் எல்லைகள் பிரிட்டிஷ் கொலம்பியா, சாஸ்கட்சுவான், வடமேற்கு பிரதேசங்கள் மற்றும் அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. கனடாவில் உள்ள நிலத்தால் சூழப்பட்ட இரண்டு மாகாணங்களில் இதுவும் ஒன்று. இது கனடாவின் நான்காவது பெரிய மாகாணமாகும்.
ஆல்பர்ட்டாவின் பொருளாதாரம் மிகவும் முன்னேறியது. சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் நன்கு படித்தவர்கள். சேவைத்துறை மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்குநராக உள்ளது. எரிசக்தி துறை குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு முக்கிய பொருளாதார பங்களிப்பை வழங்குகின்றன. இது மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதியை இயக்குகிறது. இங்கு பழங்குடி மக்கள் மற்றும் ஐரோப்பிய கம்பளி வணிகர்களின் வருகையில் இருந்து ஆல்பர்ட்டாவின் வரலாறு தொடங்குகிறது. 1905 ஆம் ஆண்டு இந்த மாகாணம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. பின்னர் பெரிய எண்ணெய் இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு நீண்ட காலமாக பழமைவாத ஆட்சி நடந்து வருகிறது.
ஆல்பர்ட்டாவின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம் ஆகும். மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை எட்மண்டன் மற்றும் கல்கரி ஆகிய இரண்டு பெரிய நகரங்களில் வாழ்கின்றனர். இங்கு பல இன மக்கள் வசிக்கின்றனர். பல்வேறு மதக் குழுக்களும் இந்த மாகாணத்தில் உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads