ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட் (Allvar Gullstrand, சூன் 5, 1862 - சூலை 28, 1930) ஒரு சுவீடிய விழியியலாளர் (கண் மருத்துவர்) ஆவார்[1]. இவர் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து (1894-1927) கண் மருத்துவம், மற்றும் ஒளியியல் துறைகளில் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1911 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. இவர், கண்களில் ஏற்படும் ஒளி சிதைவினையும், ஒளியியல் உருமத்தினையும் கண்டறிய இயல்கணித முறைகளைப்பயன்படுத்தினார். உருப்பிறழ்ச்சி (astigmatism), விழி அகநோக்கியினை மேம்படுத்துதல் மற்றும் கண்புரை நீக்கியபின் திருத்துவில்லைகளை உபயோகித்தல் ஆகியவற்றில் நடத்திய ஆய்விற்காக பாராட்டப்படுகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads