ஆஸ்ட்ராகான்
பண்டைய எழுத்துகளுடன் கூடிய உடைந்த ஓட்டுச் சில்லு From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆஸ்ட்ராகான் (Ostracon, கிரேக்கம் : ὄστρακον ostrakon, பன்மை ὄστρακα ostraka ) என்பது மட்பாண்டத்தின் ஒரு துண்டு ஆகும். பொதுவாக மண் குவளை அல்லது பிற மண் பாத்திரத்தில் இருந்து உடைக்கப்பட்ட ஓட்டுச் சில்லு ஆகும். தொல்லியல் அல்லது கல்வெட்டு சூழலில், ஆஸ்ட்ராகா என்பது எழுத்துகள் கீறப்பட்ட ஓட்டுச்சில்லு அல்லது சிறிய கல் துண்டு போன்றவற்றைக் குறிக்கிறது. பொதுவாக இவை ஏற்கனவே உடைந்த ஓட்டுச் சில்லில் கீறி எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது; பழங்கால மக்கள் மலிவாக, தாரளமாக கிடைக்கும் மட்பாண்ட ஓட்டுச் சில்லுகளை பலவிதமான நோக்கங்களுக்காக எழுதுவதற்கு வசதியாக தேவையான இடங்களாக பயன்படுத்தினர். பெரும்பாலும் இவை மிகக் குறுகிய சொற்களைக் கொண்டவை, ஆனால் சில சந்தர்ப்பங்களில் மிக நீண்டதாகவும் இருக்கலாம்.



Remove ads
சமூகத்திலிருந்து தள்ளிவைத்தல்
செவ்வியல் ஏதென்சு சமூகத்தில் ஒரு குடிமகனை ஆஸ்ட்ராசிசத்துக்கான (நாடு கடத்துதல்) பரிந்துரை வரும்போது. நாடு கடத்தவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை சனநாயக முறைப்படி குடிமக்களின் வாக்களைப் பெற்று முடிவு எடுக்கப்படும். குடிமக்கள் ஓட்டுச் சில்லில் அந்த நபரின் பெயரை எழுதி வாக்களிப்பார்கள்; வாக்கு எண்ணப்பட்டு, அந்த நபருக்கு எதிராக முடிவு அமைந்தால், அந்த நபர் பத்து ஆண்டு காலத்திற்கு நகரத்திலிருந்து நாடு கடத்தப்படுவார், இதனால் புறக்கணிப்பு (Ostracism) என்ற சொல் உருவானது .
Remove ads
எகிப்திய சுண்ணாம்பு மற்றும் பானை ஓட்டு ஆஸ்ட்ராகா


வழவழப்பான மேற்பரப்புள்ள துண்டுகள் எழுத பயன்படுத்தபட்டன. பொதுவாக பயனற்ற உடைந்த மலிவான பொருள் ஆஸ்ட்ராகாவுக்கு பயன்படுத்தப்பட்ன. ஏனெனில் அவை எளிதில் கிடைக்கக்கூடியனவாகும். எனவே செய்திகள், மருந்துச்சீட்டுகள், இரசீதுகள், மாணவர்களின் பயிற்சிகள், குறிப்புகள் போன்ற குறுங்கால பயன்பாட்டு இயல்புடைய எழுத்துக்களுக்கு இவை அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. மட்பாண்ட ஓடுகள், சுண்ணாம்பு செதில்கள், [1] மற்றும் பிற கல் வகைகளின் சிறிய துண்டுகளாக இருப்பவை இதற்காக பயன்படுத்தப்பட்டன. ஆஸ்ட்ராகா பொதுவாக சிறியதாக இருந்தது, ஒரு சில சொல் அல்லது மையால் வரையப்பட்ட ஒரு சிறிய படம் [2] போன்றவற்றைக் கொண்டதாக இருந்தது. ஆனால் டெய்ர் எல் மதீனாவில் உள்ள கைவினைஞர் சென்னெட்ஜெமின் கல்லறையில் சினுஹேவின் கதை பொறிக்கப்பட்ட ஒரு பெரிய ஆஸ்ட்ராகான் இருந்தது. [1]
எகிப்தியலில் ஆஸ்ட்ராகாவின் முக்கியத்துவம் மகத்தானது. எகிப்தின் மருத்துவம் முதல் உலகியல் வரையிலான நூல்களை் இவற்றினால் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவை மற்ற பண்பாடுகளில் அழிந்துபோயின. [3] இவை பெரும்பாலும் நூலகங்களில் பாதுகாக்கப்பட்ட இலக்கிய நூல்களை விட நீண்டகாலம் தாக்குப்பிடித்து அன்றாட வாழ்வின் சிறந்த சாட்சிகளாகச் செயல்படுகின்றன.
தேர் அல்-மதினா மருத்துவ ஆஸ்ட்ராகா
தேர் அல்-மதீனாவில் காணப்படும் பல ஆஸ்ட்ராகாக்கள் புதிய இராச்சியத்தின் மருத்துவப் பணிகள் பற்றிய ஆழமான அழுத்தமான பார்வையை அளிக்கின்றன. மற்ற எகிப்திய சமூகங்களைப் போலவே, தேர் அல்-மதீனாவில் வேலை செய்பவர்களும் வசிப்பவர்களும் மருத்துவ சிகிச்சை, பிரார்த்தனை, மந்திரம் ஆகியவற்றின் மூலம் கவனிப்பைப் பெற்றனர் என்பதை இந்த ஆஸ்ட்ராக்கா காட்டுகின்றன. [4] தேர் அல்-மதீனாவில் உள்ள பதிவுகள் கிராமத்தின் பதிவுகள் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளித்த " மருத்துவர் " மற்றும் தேள் கொட்டிய மந்திர சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற "ஸ்கார்பியன் சார்மர்" ஆகிய இருவரையும் குறிப்பிடுகின்றன. [5]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads