ஆஸ்ட்ராசிசம்

ஏதென்சின் சனநாயகத்தின் கீழ் ஒரு குடிமகன் ஏதென்ஸிலிருந்து 10 ஆண்டுகளுக்கு வெளியேற்றப்படுதல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆஸ்ட்ராசிசம் என்னும் விலக்கிவைத்தல் (Ostracism, கிரேக்கம்: ὀστρακισμός , ostrakismos ) என்பது ஏதென்சின் சனநாயக நடைமுறையாகும். இதன்படி எந்தவொரு குடிமகனும் ஏதென்ஸ் நகர அரசிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு வெளியேற்றப்படலாம். இது அரசுக்கு அச்சுறுத்தல் அல்லது சர்வாதிகாரி என்று கருதப்படும் ஒருவரை நடுநிலையாளராக்குவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் பரவலர் கருத்துக்கள் பொருட்படுத்தாமல் சமூக விலக்கம் செய்யப்பட்டனர். சமூக புறக்கணிப்புக்கான பல்வேறு நிகழ்வுகளுக்கு " ஆஸ்ட்ராசிசம் " என்ற சொல் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

செயல்முறை

கிரேக்க மொழியில் ஆஸ்ட்ராகா ( ஆஸ்ட்ராகோன், ὄστρακον) எனப்படும் வாக்களிக்க வாக்கு சீட்டாகப் பயன்படுத்தப்பட்ட ஓட்டுச் சில்லுகளால் இந்தப் பெயர் வந்தது. உடைந்த மட்பாண்டங்கள், ஏராளமாக கிட்டத்தட்ட விலையின்றி கிடைத்தன. அவை ஒரு வகையில் பழைய தாள் போன்று பயன்படுத்தப்பட்டன ( எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை மிகுந்த செலவழிக்க முடியாத அளவுக்கு விலை அதிகமான உயர்தரத் தாளான பாப்பிரசுக்கு மாற்றாக).

ஒவ்வோர் ஆண்டும் ஏதென்ஸ் மக்களிடம் யாரையாவது விலக்கிவைக்க விரும்புகிறீர்களா என்று சட்டசபையில் கேட்கப்பட்டது. சனநாயக நடைமுறையின் கீழ் அரசாங்க விசையங்களில் பயன்படுத்தப்பட்ட பத்து மதங்களில் ஆறாவது (நவீன கிரிகோரியன் நாட்காட்டியில் சனவரி அல்லது பிப்ரவரி) அரசு நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் பத்து மாதங்களில் ஆறாவது மாதத்தில் இக்கேள்வி வைக்கப்பட்டது. [1] அவர்கள் "ஆம்" என்று வாக்களித்தால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு விலக்கிவைத்தல் நடைமுறை நடத்தப்படும். அகோராவின் ஒரு பகுதியில், விலக்கி வைத்தலுக்கான வாக்களிப்பு நடத்தப்பட்டது. [2] குடிமக்களில் பலர் படிப்பறிவில்லாதவர்களாவர். அவர்கள் தாங்கள் ஒதுக்கிவைக்க விரும்புவோரின் பெயரை எழுத தெரிந்த ஒருவரிடம் சொல்லி எழுதவைப்பார். பின்னர் பெயர் பொறித்த மட்பாண்டச் சில்லையை ஒரு குடத்தில் இடுவர். தலைமை அதிகாரிகள் கிடத்தில் இடப்பட்ட ஓஸ்ட்ராகாவை எண்ணி, பெயர்களை தனித்தனி குவியல்களாக வரிசைப்படுத்துவர். அதிக அளவு ஆஸ்ட்ராகாவைக் கொண்ட குவியல் கோரத்தை கொண்டிருந்தால் அவர் நகர அரசில் இருந்து வெளியேற்றப்படுவார். புளூட்டாக்கின் கூற்றுப்படி, மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் குறைந்தது 6000 ஆக இருந்தால் தள்ளிவைத்தல் செல்லுபடியாகும் என்று கருதப்பட்டது; [3] வரலாற்றாளர் பிலோகோரசின் தைற்றின்படி, வெளியேற்றப்பட வேண்டிய நபருக்கு எதிராக குறைந்தபட்சம் 6000 வாக்குகள் அளிக்கப்பட வேண்டும். [4] [5] 6000 பேர் கொண்ட குழுவிற்கான புளூடார்ச்சின் சான்றுகள் அடுத்த நூற்றாண்டில் குடியுரிமை வழங்குவதற்குத் தேவையான எண்ணிக்கையுடன் ஒத்துப்போகின்றன. [6] [7] [8] [9]

வாக்குகள் வழியாக ஒதுக்கிவைக்க பரிந்துரைக்கப்பட்ட நபர் நகரத்தை விட்டு வெளியேற பத்து நாட்கள் கொடுக்கபட்டன. அவர் நகருக்கு திரும்ப முயன்றால், மரணதண்டனை அளிக்கப்படும். நாடு கடத்தப்பட்டவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவில்லை, அந்தஸ்து இழப்பதில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் களங்கம் இல்லாமல் நகருக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார். [1]தள்ளிவைக்கபட்ட ஒருவரை முன்கூட்டியே திரும்ப அழைக்க சட்டசபைக்கு உரிமை இருந்தது. அப்படி கிமு 479 பாரசீக படையெடுப்பிற்கு முன், ஒரு பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி குறைந்தபட்சம் தள்ளிவைக்கப்பட்ட இரண்டு ஒதுக்கப்பட்ட தலைவர்களான - பெரிகல்சின் தந்தை சாந்திப்பஸ் மற்றும் அரிசுடைட்சு ஆகியோர் நட்டுக்கு திரும்பி வந்ததாக அறியப்படுகிறது. இதேபோல், கிமு 461 இல் தள்ளிவைக்கபட்ட சிமோன், அவசரநிலையின் போது திரும்ப அழைக்கப்பட்டார். [10]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads