இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு (Strontium hydroxide) என்பது Sr(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு இசுட்ரோன்சியம் அயனியும் இரண்டு ஐதராக்சைடு அயனிகளும் சேர்ந்து இத்தீவிர காரம் உருவாகிறது. இதற்காக ஒரு இசெஉட்ரோன்சியம் உப்புடன் வலிமையான ஒரு காரம் சேர்க்கப்படுகிறது. நீரிலி நிலை, ஒற்றை நீரேற்று மற்றும் எந்நீரேற்று முதலிய வடிவங்களில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு காணப்படுகிறது.
Remove ads
தயாரிப்பு
குளிர் நீரில் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு கரையுமென்பதால் NaOH அல்லது KOH போன்ற ஒரு வலிமையான காரத்தை கரையக்கூடிய ஏதாவதொரு இசுட்ரோன்சியம் உப்புக் கரைசலுடன் சொட்டு சொட்டாக சேர்ப்பதன் மூலம் எளிதாக இதைத் தயாரிக்க முடியும். பெரும்பாலும் இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு ((Sr(NO3)2 ) உப்பு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மையான நுண் தூளாக இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு வீழ்படிவாகிறது. கரைசலை வடிகட்டி குளிர் நீரில் கரைத்து பின்னர் உலர்த்தி இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது.[3]
Remove ads
பயன்பாடுகள்
இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு, முக்கியமாக கிழங்குவகை சர்க்கரை சுத்திகரிப்பிலும் நெகிழிகளில் ஒரு நிலைப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இசுட்ரோன்சியம் குளோரைடுஇசுட்ரோன்சியம் குளோரைடிலிருந்து குளோரின் தயாரிக்கையில் இசுட்ரோன்சியம் அயனிகளின் ஆதார மூலமாக இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு பயன்படுகிறது. காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை ஈர்த்து இசுட்ரோன்சியம் கார்பனேட்டாகவும் இது உருவாகிறது.
பாதுகாப்பு
விழுங்க நேர்ந்தால் மிகவும் கொடிய தீங்குகளை இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு விளைவிக்கும். கண், தோல், சுவாச உறுப்புகளில் எரிச்சலை உண்டாக்கும்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads