இசுமத் சுகதாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுமத் சுகதாய் (பிறப்பு 21 ஆகத்து 1915 - 24 அக்டோபர் 1991) என்பவர் ஒரு இந்திய உருது எழுத்தாளர். 1930 ஆரம்பகாலங்களில் இவர் மார்க்சிய கண்ணோட்டத்துடன் பெரும்பாலும் பெண் பாலினம் மற்றும் பெண்ணியம், நடுத்தர வர்க்க ஆளுமை மற்றும் வர்க்க மோதல்கள் போன்ற கருப்பொருள்களில் இவர் எழுதினார். இலக்கிய யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாணியில், இருபதாம் நூற்றாண்டின் இந்திய உருது இலக்கியத்தில் சுகதாய் தன்னை ஒரு குறிப்பிடத்தக்க குரல் என்று நிறுவித்துக்கொண்டார், மேலும் 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப் பெற்றார்.
Remove ads
வாழக்கை வரலாறு
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் (1915 - 41)
இசுமத் சுகதாய் 21 ஆகத்து 1915 ஆம் ஆண்டில் இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பதாவுன் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் நாசுரத் கானம் மற்றும் மிர்சா கோசம் பாய் சுகதாய்.[1] இவரது பெற்றோருக்கு இவருடன் சேர்த்து மொத்தம் பத்து பிள்ளைகள். ஆறு ஆண் பிள்ளைகள் மற்றும் நான்கு பெண் பிள்ளைகள். இவருடன் பிறந்தவர்களில் இவர் ஒன்பதாவது பிள்ளை. சுகதாயின் தந்தை இந்திய அரசின் குடியியல் பணியில் இருந்ததால் தொடர்ந்து பல ஊர்களுக்கு மாறிக் கொண்டே இருக்கும் சூழல் இருந்தது. இதனால் பல்வேறு ஊர்களில் வசிக்கும் சூழல் ஏற்பட்டது. சுகதாய் தனது பெரும்பாலான பிள்ளை பருவத்தை ஜோத்பூர், ஆக்ரா மற்றும் அலிகர் போன்ற ஊர்களில் செழவழித்தார். இவரை தவிர இவருடன் பிறந்த மற்ற அனைத்து சகோதரிகளும் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு கணவருடன் சென்றுவிட்டனர் அதனால் பெரும்பாலும் இவரது சகோதரர்களுடன் இருக்கும் நிலை உண்டானது. குறிப்பாக சுகதாய் தனது இரணடாவது அண்ணன் மிர்சா அசிம் பாக் சுகதாய் ஒரு நாவலாசியராக தனது குருவாக வழிகாட்டியாக இருந்தார் என்று கூறுகிறார். இவரது சகோதரர்கள் சுகதாயின் பிள்ளை பருவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார். இறுதியாக சுகதாயின் தந்தை குடியியல் பணியில் இருந்து ஓய்வு பெற்றப்ப் பின் இவர்களது குடும்பம் ஆக்ராவில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினர்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads