இடையுயிர்

From Wikipedia, the free encyclopedia

இடையுயிர்
Remove ads

இடையுயிர் என்பது, சில பேச்சு மொழிகளில் பயன்படுகின்ற ஒரு வகை உயிரொலி. இதை ஒலிக்கும்போது நாக்கு வாயின் மேல் பகுதிக்கு மிக அண்மையிலோ அல்லது கீழே அதிகம் தொலைவிலோ இல்லாது இடை நிலையில் இருக்கும். அதாவது, மேலுயிர்களை ஒலிக்கும் போதும், கீழுயிர்களை ஒலிக்கும் போதும் இருக்கும் நிலைகளுக்கு இடையில் அமையும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் தனியான குறியீட்டைக் கொண்டுள்ள ஒரே இடையுயிர், இடை நடுவுயிர் [ə] ஆகும். இக்குறியீடு schwa என்னும் உயிரொலியைக் குறிக்கவும் பயன்படுகிறது.[1][2]

பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம்   ஒலி
முன் முன்-அண்மை நடு பின்-அண்மை பின்
மேல்
Thumb
iy
ɨʉ
ɯu
ɪʏ
ɪ̈ʊ̈
ʊ
eø
ɘɵ
ɤo
ɤ̞
ɛœ
ɜɞ
ʌɔ
æ
ɐ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர்  இதழ்குவி உயிர்.

அ.ஒ.அ. உயிரொலிக்கு உரிய வெளியை மூன்றாகப் பிரிக்கிறது. இவை, [e] அல்லது [o] போன்ற மேல் நடுவுயிர், [ɛ] அல்லது [ɔ] போன்ற கீழ் நடுவுயிர் என்பன, கீழுயிர் [a] இற்கும், மேலுயிர்கள் [i] அல்லது [u] இற்கும் இடையேயுள்ள ஒலியலைச் செறிவு வெளியில் சம அளவு தூரங்களில் உள்ளன.

உண்மையான முன் அல்லது பின் உயிர்களில் நான்கு வேறுபட்ட உயர நிலைகளுக்கு மேல் பிரித்தறிவது கடினம் என்பதால், மிகவும் குறைவான மொழிகளிலேயே இடையுயிரின் மூன்று நிலைகளிடையேயும் வேறுபாடு காட்டுவனவாக உள்ளன. ஆனால், ஆசுத்திரிய-பவேரிய செருமன் கிளை மொழியான ஆம்சுட்டெட்டனில் கீழ் நடு உயிரொலியுடன், முன் இதழ்விரி உயிர், முன் இதழ்குவி உயிர், முன் இதழ்குவி உயிர், என்பன உட்பட்ட நான்கு உயர்நிலை வேறுபாடுகள் உள்ளன. இவற்றை ஏற்கெனவேயுள்ள அ.ஒ.அ. குறியீடுகளான /a/, /i e ɛ æ/, /y ø œ ɶ/, /u o ɔ ɑ/ என்பவற்றைப் பயன்படுத்திக் குறிக்கின்றனர்.

ஆம்சுட்டெட்டன் பவேரியம்
(ஒலிபெயர்ப்பு)
மேல்iyu
மேல்-இடைeøo
கீழ்-இடைɛœɔ
மேல்-கீழ்æɶ̝ɑ̝
கீழ்a

எனினும், உயிரொலிகள் ɶ ɑ/ என்பன, கீழ் /a/, மேல் /i y u/ என்பவற்றுக்கு இடையே, மூன்றிலொரு பங்கு தூரத்தில் உள்ளன. இது சரியாக உயிரொலிகள் œ ɔ] என்பவற்றுக்கு அ.ஒ.அ. தரும் வரைவிலக்கணத்துக்கு ஒப்ப அமைகின்றது. இதனால், ஆம்சுட்டெட்டன் பவேரியம், இடையுயிர் ஒலிகளை, கீழ்-இடை, மே-இடை ஆகிய இரண்டு வகை உயிரொலிகளில் இருந்தும் வேறுபடுத்தும் மொழிகளுக்கான எடுத்துக்காட்டாக அமைகின்றது.

ஆம்சுட்டெட்டன் பவேரியம்
(ஒலியலைச் செறிவு வெளி)
மேல்iyu
மேல்-இடைeøo
இடைø̞
கீழ்-இடைɛœɔ
கீழ்a
Remove ads

தமிழில்

தமிழில் இந்த வகையைச் சேர்ந்த உயிரொலிகள் எதுவும் இல்லை.

உசாத்துணைகள்

  • கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
  • சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads