இணைகேடய இயக்குநீர்

From Wikipedia, the free encyclopedia

இணைகேடய இயக்குநீர்
Remove ads

இணைகேடய இயக்குநீர் [Parathyroid hormone (PTH)], இணைகேடய சுரப்பியின் முதன்மை உயிரணுக்களால் 84 அமினோ அமிலங்களைக் கொண்ட பல்புரதக் கூறாகச் சுரக்கப்படுகின்றது. இது, இரத்த கால்சிய (Ca2+) செறிவை அதிகரிக்கின்றது. ஆனால், தைராய்டு சுரப்பியின் பக்க நுண்குமிழ் உயிரணுக்களால் உருவாக்கப்படும் கால்சிடோனின் கால்சிய (Ca2+) செறிவைக் குறைக்கின்றது. இணைகேடய இயக்குநீர் முதல் ஏற்பி (parathyroid hormone 1 receptor; எலும்பு மற்றும் சிறுநீரகத்தில் அதிக அளவு உள்ளது) மற்றும் இணைகேடய இயக்குநீர் இரண்டாம் ஏற்பிகளின் (parathyroid hormone 2 receptor; மைய நரம்பு மண்டலம், கணையம், விந்தகம் மற்றும் நஞ்சுக்கொடியில் அதிக அளவு உள்ளது) மீது செயற்படுவத்தின் மூலம் இந்த இயக்குநீர் இரத்த கால்சியச் (Ca2+) செறிவை அதிகரிக்கின்றது[2],[3],[4]. இணைகேடய இயக்குநீரின் அரைவாழ்நாள் தோராயமாக நான்கு நிமிடங்களாகும்[5]. இதன் மூலக்கூற்று நிறை 9.4 கிலோடால்டன்களாகும்[6].

Thumb
கேடய மற்றும் இணைகேடய சுரப்பிகள்
Thumb
இணைகேடய வளரூக்கியின் புரதக் கட்டமைப்பு
Thumb
மனித உடலில் கால்சியம் ஏகநிலைமை ஒழுங்குபடுத்தல்[1]. இணைகேடய வளரூக்கியின் செயல் நீல வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads