இதுதாண்டா சட்டம்

செந்தில்நாதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இதுதாண்டா சட்டம் (Idhuthanda Sattam) திரைப்படம் 1992-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை செந்தில்நாதன் எழுதி, இயக்க, மைலை ஆர். வி. குருபாதம் தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஆர். சரத்குமார், ரேகா, ஆமனி, கவுண்டமணி, செந்தில், மன்சூர் அலி கான், வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சங்கீதா ராஜன் இசை அமைத்த இப்படம், 29 மே 1992 ஆம் தேதி வெளியானது.[1][2]

விரைவான உண்மைகள் இதுதாண்டா சட்டம், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

கதைச்சுருக்கம்

செல்வராஜ் (சரத்குமார்) ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. ஒரு புது ஊரில் எஸ்.பி. பொறுப்பை ஏற்று, தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு பெண் இன்ஸ்பெக்டர் அமுதா (ஆமனி) செல்வராஜிற்கு மிகவும் உதவியாக இருக்கிறாள். அந்நிலையில், தீமைக்கு பேர்போன குருசாமி (குருபாதம்), அவரது அடியாட்கள் காளி (மன்சூர் அலி கான்), தர்மா, சூரி ஆகியோரை கட்டாயமாகத் தண்டித்துக் காட்டுவதாக சவால் விடுகிறான் செல்வராஜ். செல்வராஜ் அமுதாவிடம் தன் கடந்த கால வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறான்.

கடந்த காலத்தில், செல்வராஜ் தன் மனைவி லட்சுமி (ரேகா), குழந்தை, மாமனார் நீதிபதி வேணுகோபால் (வி. எஸ். ராகவன்) ஆகியோருடன் மிகவும் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான். தீபாவளி பண்டிகையின் போது, செல்வராஜ் குடும்பத்தினர் அனைவரும், ரவுடி குருசாமி செய்யும் கொலையை பார்த்து விடுகின்றனர். செய்த கொலைக்கு சாட்சி இருக்கக்கூடாது என்பதற்காக, செல்வராஜின் குடும்பத்தை கொலை செய்ய ஆள் அனுப்புகிறான் ரவுடி குருசாமி. அவ்வாறாக ஏற்படும் மோதலின் போது, செல்வராஜின் மனைவியும், மாமனாரும் கொல்லப்பட்டு, செல்வராஜும் அவனது குழந்தையும் அதிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். அதில் செல்வராஜ் படுகாயம் அடைகிறான். குருசாமிக்கு மரண தண்டை கிடைத்தாலும், அடியாட்களின் உதவியுடன் வழக்கிலிருந்து விடுதலை பெறுகிறான். இந்நிலையில், செல்வராஜ் குருசாமியையும் அவனது ஆட்களையும் எவ்வாறு சதி செய்து தண்டித்தான் என்பதே மீதிக் கதையாகும்.

Remove ads

இசை

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் சங்கீதா ராஜன் ஆவார். இப்படத்தின் பாடலாசிரியர்கள் பிறைசூடன் மற்றும் முத்துலிங்கம் ஆவர்.

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், பாடல் ...

விமர்சனம்

"வசனங்கள் சிறப்பாக இருப்பதாகவும், இயக்கம் நன்றாக இருப்பதாகவும், இசை சராசரியாக இருப்பதாகவும், கட்டுக்கோப்பான உடலுடன் சரத்குமார் இருப்பதாகவும், சிறு வேடமாக இருந்தாலும் ரேகா நன்றாக நடித்திருப்பதாகவும்" விமர்சனம் செய்யப்பட்டது.[3]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads