செந்தில்நாதன்
தமிழக திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செந்தில்நாதன் ஜம்புலிங்கம் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் முதன்மையாக சென்னை மையமாகக் கொண்ட தமிழ்த் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றுகிறார். இவர் அதிரடி-மசாலா படங்களுக்கு மிகவும் பிரபலமானவர். 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த நம் நாடு படத்தை இயக்கிய இயக்குநர் ஜம்புலிங்கத்தின் மகன் ஆவார்.
திரைப்பட வாழ்க்கை
இவர் துவக்கத்தில், சூலம் (1980), பக்கத்து வீட்டு ரோஜா (1982) ஆகிய படங்களில் இயக்குநர் எம். பாஸ்கரின் உதவியாளராகப் பணியாற்றினார். பின்னர் எஸ். ஏ. சந்திரசேகரின் உதவி இயக்குநராக ஏழு ஆண்டுகள் சட்டம் ஒரு இருட்டறை முதல் நீதிக்குத் தண்டனை (1987) வரை பணியாற்றினார். அந்த நேரத்தில், இவர் நடிகர் விசயகாந்துடன் நட்பு கொண்டிருந்தார், அவர் எதிர்காலத்தில் இவரது படங்களில் நடிப்பதாக உறுதியளித்தார். இவர் இயக்கும் ஒரு படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தபோது, இவர் விஜயகாந்தை சந்தித்தார். ஆனால் அப்போது விஜயகாந்த் பல படங்களில் பரபரப்பாக நடித்துக்கொண்டு படத்திற்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருந்தார். அவர் நேரம் ஒதுக்குவதற்காக காத்திருந்த இவர், வி. அழகப்பனின் உதவி இயக்குநராக மூன்று படங்களில் பணியாற்றினார். இறுதியில் செந்தில்நாதன் 1988 ஆம் ஆண்டு பூந்தோட்ட காவல்காரன் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் பெருவெற்றியடைந்தது.[1]
2001 ஆம் ஆண்டில், தயாரிப்பாளர் இப்ராஹிம் ரவுத்தருடன் காதல் முதல் காதல் வரை என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை உருவாக்க இவர் ஒப்புக் கொண்டார், இதில் அறிமுக நாயகன் பாலகுமரன் மற்றும் உமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் எனப்பட்டது. அப்படமானது இயக்குனரின் 25 வது படமாக இருக்கும் எனப்பட்டது. ஆனால் நிதி சிக்கல்கள் படம் தயாரிப்பாளரால் கைவிடப்பட்டது.[2]
Remove ads
திரைப்படவியல்
தொலைக்காட்சி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads