2012 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் From Wikipedia, the free encyclopedia

2012 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
Remove ads

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2012 (2012 Indian vice presidential election) என்பது இந்தியக் குடியரசின் பதின்மூன்றாம் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆகத்து 7, 2012 இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலாகும்.[1] தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலம் ஆகத்து 10 2012ல் முடிவடைந்ததையடுத்து இத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தியது. குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தலில் மக்களவையில் உள்ள நியமன உறுப்பினர்கள் இருவரையும் சேர்த்து 535 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 12 பேர்களையும் சேர்த்து 245 உறுப்பினர்களும் என மொத்தம் 780 உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மக்களவைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் விண்ணப்பத்தில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் குறைந்தது 20 பேர் முன் மொழிந்தும், 20 பேர் வழிமொழிந்தும் கையொப்பமிட்டிருக்க வேண்டும். இப்படி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விரைவான உண்மைகள் வேட்பாளர், கட்சி ...
Remove ads

தேர்தல் அட்டவணை

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2012 தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.[2]

மேலதிகத் தகவல்கள் வ.எண்., தேர்தலுக்கான நடவடிக்கை ...
Remove ads

வேட்பாளர்கள்

இந்தத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக ஹமீத் அன்சாரியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர்.

தேர்தல் புறக்கணிப்பு

இந்தத் தேர்தலை தெலுங்கு தேசம் கட்சி, பிஜூ ஜனதாதளம், புரட்சிகர சோசலிசக் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன.

தேர்தல் முடிவு

  • வாக்களிக்கத் தகுதியுடைய வாக்குகள்: 787
  • பதிவான வாக்குகள்: 736
  • ஹமீத் அன்சாரி பெற்ற வாக்குகள்: 490
  • ஜஸ்வந்த் சிங் பெற்ற வாக்குகள்: 238
  • செல்லாத வாக்குகள்: 8
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் பெற்ற 238 வாக்குகளை விட 252 வாக்குகள் அதிகம் பெற்றார். இதனால் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றதாகத் தேர்தல் அதிகாரியும், மக்களவைச் செயலருமான ஜெனரல் டி. கே. விசுவநாதன் அறிவித்தார். [3]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads