இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

From Wikipedia, the free encyclopedia

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்
Remove ads

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம்.

விரைவான உண்மைகள் இந்தியா குடியரசுத் துணைத் தலைவர், வாழுமிடம் ...

இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63 ல் குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார். குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம்.

குடியரசுத் தலைவர் எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.

Remove ads

தேர்ந்தெடுக்கும் முறை

ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.[1] ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது.

இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றி பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.

Remove ads

ஊதியம்

துணைக்குடியரசுத் தலைவரின் ஊதியம் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவரின் அலுவல் நிலைக்காரணமாக அதற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகின்றது.

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள்.[2]

மேலதிகத் தகவல்கள் எண்., குடியரத் துணைத் தலைவர் ...

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads