இந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகம் (Army Training Command) (சுருக்கமாக: ARTRAC), இந்தியத் தரைப்படையின் 7 கட்டளையகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் சிம்லா உள்ளது.[1]இந்த இராணுவப் பயிற்சி கட்டளையகம் 1991ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. லெப். ஜெனரல் தரத்திலான உயர் இராணுவ அதிகாரி இக்கட்டளையகத்தின் கட்டளை தளபதியாக செயல்படுவார்.

விரைவான உண்மைகள் இந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகம், செயற் காலம் ...
Remove ads

வரலாறு

இந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகம் 1 அக்டோபர் 1991 அன்று மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரத்தில் தொடங்கப்பட்டது. பின் 31 மார்ச் 1993 அன்று இதனை சிம்லா நகரத்திற்கு மாற்றப்பட்டது.[2]இந்தியாத் தரைப்படையினருக்கு செயல்திறன் மிக்க பயிற்சியை வழங்குவதே இக்கட்டளையகத்தின் முக்கிய நோக்கமாகும்.[3]

2020ஆம் ஆண்டில் இந்தியத் தரைப்படையின் பயிற்சிகான தலைமை இயக்குநரகத்தை (Directorate General of Military Training (DGMT) இந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகத்துடன் இணைக்கப்பட்டது.[4]

இந்தியத் தரைப்படையின் பயிற்சிகான தலைமை இயக்குநரகத்தின் கீழ் சைல் இராணுவப் பள்ளி, பெங்களூரு இராணுவப் பள்ளி, அஜ்மீர் இராணுவப் பள்ளி, பெல்காம் இராணுவப் பள்ளி, தோல்பூர் இராணுவப் பள்ளி மற்றும் சைனிக் பள்ளிகள் இயங்கி வந்தது[5]

Remove ads

நோக்கங்கள்

  • நிகழ்நேர சூழ்நிலையைத் தூண்டும் வகையில், மூலோபாயம், செயல்பாட்டுக் கலை, தந்திரோபாயங்கள், தளவாடங்கள், பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகிய துறைகளில் போர் பற்றிய கருத்துகள் மற்றும் கோட்பாடுகளை உருவாக்குதல்.
  • இராணுவத்தின் அனைத்து பயிற்சிகளுக்கும் ஒருங்கிணைப்புக்குரிய முகமையாக செயல்படுதல்.
  • வான்படை மற்றும் கப்பல் படைகளுடன் இணைந்து கூட்டுக் கோட்பாடுகளை உருவாக்குதல்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads