மனோஜ் முகுந்த் நரவானே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே (Manoj Mukund Naravane) (பிறப்பு: 22 ஏப்ரல் 1960) 27வது இந்தியத் தரைப்படைத் தலைவர் ஆவார். மேலும் இவர் தற்காலிகமாக 15 டிசம்பர் 2021 முதல் முப்படைகளின் தலைமைப் படைத்தலைவராகவும் உள்ளார்.[3] நரவானே சீக்கிய லைட் படையணியின் 7வது பட்டாலியனில் சூன் 1980இல் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் பிபின் இராவத் ஓய்வுக்கு பிறகு 31 டிசம்பர் 2019 அன்று இந்தியத் தரைப்படைத் தலைவராக பதவியேற்றார். இவர் முன்னர் கிழக்கு மண்டல கட்டளை அதிகாரி, இராணுவப் பயிற்சி கட்டளை அதிகாரி, 2வது கூர்க்கா படையணி, அசாம் ரைபிள்ஸ், 106வது தரைப்படை அணி மற்றும் இராஷ்டிரிய ரைபிள்ஸ் படையணிகளில் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இவர் 30 ஏப்ரல் 2022 அன்று பணி ஓய்வு பெற்றார்.
Remove ads
பெற்ற பதக்கங்கள்
குடும்பம்
இவர் புனே நகரத்தில் பிறந்தவர்.[4][5] இவரது தந்தை முகுந்த் நரவானே இந்திய வான்படையில் விங் காமாண்டராக பணியாற்றியவர். இவரது தாய் சுதா அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியவர் ஆவார்.[6][7] இவருக்கு வீணா எனும் மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads