இந்தியத் திரைப்படத்துறை

From Wikipedia, the free encyclopedia

இந்தியத் திரைப்படத்துறை
Remove ads

இந்தியத் திரைப்படத்துறை என்பது இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைக் குறிக்கும்.[8] தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், போஜ்புரி, வங்காள மொழி ஆகிய மொழிகளில் பெரும் திரைப்படத்துறைகள் செயல்படுகின்றன. இந்தியாவில் திரைப்படத்துறை மிகவும் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1800 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இந்திய மொழிகள்களில் இல் தயாரிக்கப்படுகின்றன.[9][10][11] சென்னை, கொல்கத்தா, ஐதராபாத்து, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி. போன்ற நகரங்கள் இந்தியத் திரைப்பட உற்பத்திக்கு மிக முக்கியமாக விளங்குகின்றது.[12] 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி வருடாந்திர திரைப்பட வெளியீட்டில் நைஜீரியா நாட்டை விட இந்தியா முதலிடதில் உள்ளது.[13]

விரைவான உண்மைகள் இந்தியத் திரைப்படத்துறை, திரைகளின் எண்ணிக்கை ...

2000 ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியத் திரைப்படத்துறையின் ஒட்டுமொத்த வருவாய் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். மொழி வாரியாக பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழி திரைப்படத்துறை வசூல் ரீதியாக 43 சதவீதம் வருவாய் ஈட்டியது. தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை 36 சதவீத வருவாய் ஈட்டியது. தென்னிந்தியத் திரைப்படத்துறை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு ஆகிய ஐந்து திரைப்படத் துறையை உள்ளடக்கியது.

இந்தியத்திரைப்படத்துறை உலகிலேயே அதிகளவில் திரைப்படங்கள் வெளியிடும் திரைத்துறைகளில் முதல் இடத்தில் உள்ளது. 2003ல் மட்டும் 877 திரைப்படங்களும் 1177 விவரணைப்படங்களும் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி இந்தியாவில் திரைப்பட அனுமதிச்சீட்டுக்களின் கட்டணம் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகின்றது அதாவது ஒரு அனுமதிச் சீட்டின் விலை 0.20 அமெரிக்க டாலர்களும்.அமெரிக்காவில் அனுமதிச்சீட்டின் விலை 6.41 டாலர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2005 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.மேலும் இந்தியாவில் அமைந்திருக்கும் ராமோஜி திரைப்பட நகரமே உலகின் மிகப் பெரிய திரைப்பட நகரம்.

Remove ads

இந்தியாவில் திரைப்படத்தின் அறிமுகம்

1896-1910

திரைப்படம் இந்தியாவில் 1896 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. லுமியர் பிரதர்ஸ் சினிமட்டோகிரபி (Lumiere Brothers' Cinematography) என்னும் நிறுவனம் பம்பாயில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது. டைம்ஸ் ஆஃப் இண்டியா இது பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டது. அதே ஆண்டில் மதராஸ் நிழற்பட நிலையம் (Madras Photographic Store) அசையும் நிழற்படங்கள் பற்றி விளம்பரப்படுத்தியது. 1897 ஆம் ஆண்டளவில் பம்பாயில் கிளிஃப்டன் அண்ட் கோ நிறுவனம் தனது மீடோஸ் தெரு நிழற்படக் கலையகத்தில் (Meadows Street Photography Studio) அன்றாடம் திரைப்படங்களைத் திரையிடத் தொடங்கியது.

Remove ads

நுழைவுச் சீட்டு

நுழைவுச் சீட்டுக்களின் விற்பனை மற்றும் ஆண்டு தோறும் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் எண்ணிக்கை என்பவற்றின் அடிப்படையில், இந்தியத் திரைப்படத்துறை உலகிலேயே மிகப்பெரியது ஆகும். உலகிலேயே குறைந்த விலையில் நுழைவுச் சீட்டுக்கள் கிடைப்பது இந்தியாவிலேயே என்று கூறப்படுகின்றது. ஆசியா-பசிபிக் பகுதியின் 73% திரைப்படம் பார்ப்பவர்கள் இந்தியாவிலேயே உள்ளனர் என்பதுடன் ஆண்டுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சி, பெருமளவிலான படம் பார்க்கும் இந்திய மக்களிலேயே தங்கியுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification of India) இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு மூன்று மாதமும் இந்தியாவின் மக்கள் தொகைக்குச் சமமான அளவினர் திரைப்பட அரங்குகளுக்குச் செல்கின்றனர். இந்தியாவில் மட்டுமன்றி, இந்திய மக்கள் பெருமளவில் வாழும் பல்வேறு நாடுகளிலும் இந்தியத் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன.

Remove ads

திரைப்படத்துறைகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads